கிருஷ்ணகிரி மாவட்ட தமிழியக்கம்,
பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக்
மற்றும் பொறியியல் கல்லூரி
இணைந்து நடத்தும்
திருவள்ளுவர் திருவிழா
விஐடி வேந்தர் கோ. விசுவநாதன்
பங்கேற்பு
ஓசூர். பிப். 19. –
ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியாளர் கல்லூரியில் திருவள்ளுவர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தரமான தொழிற்பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோனேரிப்பள்ளியில் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் சிறந்த தொழிற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு திறமையான ஆசிரியர்கள் மூலமாக, மாணவ, மாணவிகளுக்கு தரமான தொழிற்பயிற்சி மற்றும் பொறியியல் கல்வி கற்பிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் திருவிழா
இந்த கல்லூரியில் பிப்ரவரி 18-ம் தேதி அன்று திருவள்ளுவர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழியக்கம் மற்றும் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழாவை
கல்விக்கோ, உயர்க்கல்வித்தந்தை, விஐடி வேந்தரும், தமிழியக்கம் நிறுவனர், தலைவருமான
முனைவர் கோ. விசுவநாதன்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பிஎம்சி டெக் கல்லூரியின் இயந்திரவியல் துறைத்தலைவர்
த.முத்துக்குமார்
வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
வெ.மு.அன்பரசன்,
ஓசூர் முத்தமிழ்மன்றம் துணைச்செயலாளர்
மு.கண்ணன்,
மாநகர ஒருங்கிணைப்பாளர்
நெ. எழிலரசன்,
தமிழியக்கம் மாநகர செயலாளர்
இரா. வடிவேலு,
தமிழியக்க மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்
அ. உத்தம்குமார்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2 ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
வழக்கத்தில் உள்ள
ஒரே மொழி தமிழ்
இந்த விழாவில்
வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது, உலகில் 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த மொழிகளில் எட்டு மொழிகள் உள்ளன. அவற்றில் எழுத்தும், பேச்சும் மாறாமல் வழக்கத்தில் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே ஆகும்.
உலகம் பாராட்டும் திருக்குறள்
உலகத்தில் அனைத்து நாடுகளாலும், அனைத்து மதத்தினராலும், அனைத்து மொழியினராலும் போற்றப்பட்ட நூல் திருக்குறள் மட்டுமே. உலகில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலும் திருக்குறள் தான்.
கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும்
தமிழ்நாட்டில் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளும், 46 ஆயிரம் அரசுப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்களும், 46 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 46 லட்சம் மாணவர்களும், கல்வி பயின்று வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் உயர்க்கல்விக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. இந்தியாவின் மொத்த வருவாயில் 6 சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் உயர்க்கல்விக்கு 3 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்தியாவில் மேல்நிலைக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள நிலையில், உயர்க்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்தளவே உள்ளது. உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால், இப்போது இருப்பதை விட மேலும் பல லட்சம் கோடி வருவாய் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி வேந்தர் விசுவநாதன்
செய்தியாளர்களிடம்
கூறியதாவது,
தமிழ்நாட்டுக்கு இரு மொழி கொள்கைதான் உகந்தது. வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மூன்றாவது மொழி படிக்கவில்லை. அவர்கள் இந்தி, ஆங்கிலம் மட்டுமே படிக்கின்றனர். வடமாநிலத்தில் உள்ளவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே படிக்கும் நிலையில், தென்இந்திய மாநிலங்களில் மூன்று மொழிகளைப்படித்தால் மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.
அண்ணா இருமொழிக் கொள்கை தான் வேண்டும் என கூறினார். இப்போது மும்மொழிக் கொள்கை அமல்படுத்தக் கூறுவது சரியில்லை. இதனை உடனடியாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
சிறப்புரை
தமிழியக்கம் பொதுச்செயலாளர்
கவியருவி அப்துல்காதர்
பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
வாழ்த்துரை
முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி தேசிய தலைவருமான
கே.ஏ. மனோகரன்,
பிஎம்சி கல்வி
நிறுவனங்களின் தலைவர்
பெ.குமார்,
தமிழியக்கத்தின் மாநிலச் செயலாளர்
சுகுமார்,
அமைப்புச் செயலாளர்
வணங்காமுடி,
மாநகராட்சி மண்டலத்தலைவர்
ஜெயப்பிரகாஷ்
ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
நன்றியுரை
தமிழியக்கம் மாவட்டச் செயலாளர்
ப. மாணிக்கவாசகம்
நன்றியுரை ஆற்றினார்.
இந்த விழாவில் தமிழியக்கம் நிர்வாகிகள்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நிர்வாகிகள்,
பிஎம்சி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
----------------------------------------------------.