கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த
6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு
புதிய பொறுப்பாளர்கள்
நியமனம்.
காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்படும்
எம்.பி.கோபிநாத் பேட்டி
ஒசூர். ஜனவரி. 30. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடும் அளவிற்கு காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்படும் என்று கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் கோபிநாத் கூறினார்.
கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கோபிநாத் ஓசூரில், தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது.
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியில் 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின்
தலைவரும், தமிழக முதல்வருமான
மு.க.ஸ்டாலின்
இந்தியா கூட்டணியை கட்டுக்கோப்பாக வழி நடத்தி செல்கிறார். அவரை பாராட்டி நன்றி தெரிவிக்கின்றேன்.
2026 - ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அதிக இடங்களில் போட்டியிட முடியும்.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஐஎன்டியூசி தேசிய செயலாளரும்,
முன்னாள் எம்எல்ஏ
கே.ஏ. மனோகரன்
புதிய நிர்வாகிகளின் பெயர்களை வாசித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்.
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்
முன்னாள் எம்எல்ஏ
அக.கிருஷ்ணமூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி பொறுப்பாளர்கள்
எல்.சுப்பிரமணி, ஆறுமுக சுப்பிரமணி மற்றும் தகி ஆகிய 3 பேர்,
ஒசூர் தொகுதி பொறுப்பாளர்கள்
ராஜவரதன், மைஜா அக்பர், சீனிவாசரெட்டி, சாதிக்கான்,
இந்திராணி,
வேப்பனப்பள்ளி தொகுதி பொறுப்பாளர்கள்.
அமானுல்லா, கிருஷ்ணமூர்த்தி,
திம்மப்பா,
தளி தொகுதி பொறுப்பாளர்கள்
ஏ.ஜி.ராமச்சந்திரன், சங்கர், லாசர்,
ஊத்தங்கரை தொகுதி
பொறுப்பாளர்கள்
ஆறுமுகம், வெங்கடேஷ், சசிகுமார்,
பர்கூர் தொகுதி பொறுப்பாளர்கள்
உமர்பாஷா, தனசேகர், யாதவ்ராஜ்
ஆகியோரை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்துள்ளார் என அறிவித்தார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்
முன்னாள் எம்.எல்.ஏ
கே.ஏ. மனோகரன்,
நீலகண்டன்,
முனிகிருஷ்ணன்,
நாகராஜ்,
நர்லேகர்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
என அறிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது
100 - க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
----------------------------------------------.