ஜோதி தமிழ்
இணையஇதழ்
Hosur News2
Hosur News2
ஓசூர் மாநகர திமுகவில்
விளையாட்டு மேம்பாட்டு அணியின்
புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
எம்எம்ஏ, மேயரிடம் வாழ்த்து
பெற்ற புதிய நிர்வாகிகள்
ஓசூர். நவ. 18. –
By Jothi Ravisugumar
திமுகவின் ஓசூர் மாநகர விளையாட்டு
மேம்பாட்டு அணியின் புதிய நிர்வாகிகள்
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்,
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஆகியோரை நேரில் சந்தித்து
வாழ்த்து பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர
திமுகவில் மாநகர அணியின் புதிய
நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள
ஓசூர் மாநகர விளையாட்டு மேம்பாட்டு
அணியின் அமைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் துணை அமைப்பாளர்கள்
உள்ளிட்ட புதிய நிர்வாகிகள்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான
ஒய்.பிரகாஷ் மற்றும் மேயர் எஸ்.ஏ.சத்யா
ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை
அணிவித்து வாழ்த்து பெற்றனர்.