கணித மேதை
"இராமானுசனைக் கண்டெடுத்து
கணிதத் துறைக்கு வழங்கிய
மிகப்பெரிய சாதனையாளர்
கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி
பிப்ரவரி – 7 - 1877 – கணித மேதை ராமானுஜத்தைக் கண்டெடுத்த ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி
148 - வது பிறந்த தினம்.
ஓசூர். பிப்ரவரி. 7. –
கணித வல்லூநர் ஜி.எச். ஹார்டி
ஜி.எச். ஹார்டி என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர். இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார்.
வழிகாட்டி
மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணிதவியல் மேதையான சீனிவாச இராமானுசன் அவர்களுடன் நட்பு பூண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்ததே என்று பதிலளித்தார்.
வாழ்க்கை
ஜி.எச். ஹார்டி இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் 1877 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாளில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் கணிதத்தின் மீது வெறுப்புடயாராக இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே கணிதத்தின் மீது நாட்டம் இருந்தது. பள்ளி கல்விக்கு பின்னர் ஆர்டி அவரது கணித திறனுக்காக, வின்செச்டர் கல்லூரி சென்று, கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது.
ட்ரினிட்டி கல்லூரி
1896 ஆம் ஆண்டு அவர் கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார். 1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.
கணித அழகியல்
பற்றிய கட்டுரை
கணிதத் துறையில் சிறப்புத் தேர்ச்சி இல்லாதோர் நடுவே, ஜி.எச்.ஹார்டி தாம் 1940 ஆம் ஆண்டில் கணித அழகியல் பற்றி எழுதிய
"ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" A Mathematicians Apology
என்னும் கட்டுரையின் பொருட்டு அறியப்பட்டுள்ளார்.
கணிதத்தில் சிறந்த அறிவு இல்லாதோரும் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இக்கட்டுரையில்,
ஒரு கணித மேதையின் உள்மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அரிய சிந்தனைகளை ஹார்டி வழங்கியுள்ளார்.
ஹார்டியும் இந்தியக் கணித மேதை இராமானுசனும்
1914 ஆம் ஆண்டிலிருந்து ஹார்டி, இந்தியக் கணித மேதையான சீனிவாச இராமானுசனுக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார்.
அந்த இரு பேரறிஞர்களுக்கும் இடையே முகிழ்த்த நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்தது.
இராமானுசனைச் சந்தித்த முதல் நாளிலியே ஹார்டி அவருடைய மிகச்சிறந்த கணித அறிவைக் கண்டு மலைத்துப்போனார்.
இத்தனைக்கும் இராமானுசன் கணிதத் மெய்யியல் பற்றிக் கல்விக்கூடங்களில் பயின்றதில்லை. பின்னர் ஆர்டியும் இராமானுசனும் கணித ஆய்வில் நெருங்கிய ஒத்துழைப்பாளர் ஆயினர்.
கணிதத் துறைக்கு ஹார்டியின் பெரும் பங்களிப்பு
பால் ஏர்டோசு Paul Erdős என்பவர் ஒருமுறை ஹார்டியோடு நிகழ்த்திய நேர்காணலின்போது,
கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்டார்.
அதற்கு ஹார்டி அளித்த பதில்,
"இராமானுசனைக் கண்டெடுத்ததே நான் கணிதத் துறைக்கு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு"
என்பதாகும்.
மேலும், இராமானுசனும் அவரும் கணித ஆய்வில் இணைந்து ஈடுபட்டது அவர்தம்
"வாழ்வில் நிகழ்ந்த இன்பமிகு
ஒரு நிகழ்ச்சி"
என்று ஹார்டி கூறியுள்ளார்.
-------------------------------------------.