இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த
பாலியல் வன்கொடுமையை
கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓசூர். டிச. 28. –
டி ஒய் எப் ஐ
ஓசூரில் இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கம் சார்பில்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில்
மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை முன்பு
நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க
ஓசூர் பகுதி குழு செயலாளர்
சேகர்
தலைமை வகித்தார்.
ஹரி நந்தா முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க
செயலாளர்
நாகேஷ்பாபு,
மாவட்ட செயலாளர்
இளவரசன்
முன்னாள் மாவட்ட செயலாளர்
எம்.ரவி
மற்றும் மாதர் சங்க தலைவி ஆஞ்சலாமேரி
ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட
பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,
எப்ஐஆர் வெளியானதை கண்டித்தும்,
பாரபட்சமற்ற
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.