அண்ணா பல்கலைக்கழகம்...
பன்னாட்டு வழியில், அண்ணா பல்கலைக்கழகம்
கியூஎஸ் உலக பல்கலைகழகங்களின்
தரவரிசை பட்டியலில்
651-700 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே தரவரிசையில் ஆசியாவில்
301-350வதாகவும்
மற்றும் பிரிக்ஸ் நாடுகளில்
85வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்,
அண்ணா பல்கலைக்கழகத்தின்
முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 4 – 1978 –
இந்தியாவின், தலைசிறந்த
பல்கலைக்கழகங்களில் ஒன்றான
அண்ணா பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்ட தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். செப்டம்பர். 04. -
சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம்,
பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.
இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும்,
துணை வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.
முதன்மை வளாகத்தில்
கிண்டி பொறியிற் கல்லூரி,
அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி,
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் மூன்று தொழில்நுட்ப துறைகளும் உள்ளடங்குவனவாகும்.
சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகம் குரோமேபேட்டையில் அமைந்துள்ளது.
1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல்,
சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாகப்
பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்டது.
பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது
மறுசீரமைப்பு
2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின்
சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், தென்சென்னை பகுதியில்
100 ஏக்கர் (400,000 சதுர.மீ) பரப்பில்
அமைந்துள்ளது.
அடையாறும் தமிழக ஆளுனர் மாளிகையான ராஜ்பவனும் இவ்வளாகத்தை ஒட்டி
அமைந்துள்ளன.
முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி அமைந்துள்ளன.
மெட்ராசு தொழில்நுட்ப கழகம் 200,000 சதுர.மீட்டர் பரப்பளவில் குரோம்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ளது.
அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியின் சில ஆய்வுக்கூடங்கள் தரமணி வளாகத்தில் அமைந்துள்ளன.
சேர்க்கை
தமிழ்நாடு தொழில்முறைக்கல்வி படிப்புகள் நுழைவுத்தேர்வின் வழியாக தொழில்முறைகல்விக்கான மாணவர் சேர்க்கை 2006 வரை நடைமுறையில் இருந்தது.
2007-2008 கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் மேனிலை (12ஆம் வகுப்பு) கல்வியின் மதிப்பெண்கள் வாயிலாகச் சேர்க்கைத் தொடங்கி நடைமுறையில் உள்ளது.
முதுகலை கல்வி சேர்க்கை TANCET மற்றும் GATE போன்ற நுழைவுத்தேர்வுகளின் மதிப்பெண்கள் கொண்டு நடத்தப்படுகிறது.
கல்வி
தனது இணைப்பு கல்லூரிகள் வாயிலாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியை வழங்கிவருகிறது.
இது இரட்டை அமைப்பைச் சார்ந்ததாகும், அவ்வண்ணம் ஒரு கல்வி ஆண்டிற்கு இருமுறையாக -
முதலாவது அரையாண்டு நவம்பர்-திசம்பர் மாதங்களிலும்,
இரண்டாவது அரையாண்டு மே-சூன் மாதங்களிலும்
தேர்வுகள் நடைபெறும்.
தரவரிசை
பன்னாட்டு வழியில், அண்ணா பல்கலைக்கழகம் கியூஎஸ் உலக பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலில் 651-700 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே தரவரிசையில் ஆசியாவில் 301-350வதாகவும் மற்றும் பிரிக்ஸ் நாடுகளில் 85வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி
(The Anna University Amendment Act)
2001-இன் படி, ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன.
இவற்றுள்
ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும்
மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும்
225 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்,
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
கிரேசி மோகன்,
புகழ்ப்பெற்ற தமிழ் நகைச்சுவை நாடக ஆசிரியர், நடிகர்.
'சுஜாதா' ரங்கராஜன் ,
பிரபல தமிழ் எழுத்தாளர்.
ராஜ் ரெட்டி,
1994ம் ஆண்டிற்கான டியூரிங் பரிசு வென்றவர்,
கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்திலுள்ள கணிப்பொறியியல் துறையின் முன்னாள் முதல்வர்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,
முன்னாள் இந்திய மட்டைப்பந்து விளையாட்டு வீரர்
--------------------------------------------------------.