ஓசூர் உழவர் சந்தையில்
4 நாளில்...
ரூ.2.03 கோடி மதிப்பில் விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
உழவர்சந்தையில் பொங்கல்
தை திருநாளை முன்னிட்டு
சாதனை அளவாக
ரூ.2.03 கோடி மதிப்பில்
காய்கறிகள்,
மலர்கள்,
கனிகள்,
விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஓசூர். ஜன. 18. –
தமிழ்நாட்டிலேயே
இரண்டாவது பெரிய
உழவர் சந்தை
ஓசூர் உழவர்சந்தையில்
பொங்கல் தைத்திருநாளை முன்னிட்டு
ஜனவரி 13-ம் தேதி முதல்
16-ம் தேதி வரை 4 நாட்களில்
மொத்தம் ரூ.2.03 கோடி மதிப்பில்
காய்கறிகள்,
மலர்கள், கனிகள்
விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஓசூர் உழவர்சந்தை
தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய
உழவர் சந்தையாக திகழ்கிறது.
இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள
300 விவசாயிகள் மூலமாக உழவர் சந்தைக்கு
தினமும் 100 டன் முதல் 150 டன் எடையுள்ள
சுமார் 75 வகையான காய்கறிகள்,
மலர்கள், கனிகள்
விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கு விற்பனையாகும்
காய், கனி, மலர்களை
வாங்கிச் செல்ல ஒரு நாளைக்கு
சராசரியாக சிறு வியாபாரிகள் உட்பட
15 ஆயிரம் நுகர்வோர்கள்
வந்து செல்கின்றனர்.
இந்த உழவர் சந்தையின் நிர்வாக பணியில்
வேளாண்மை அலுவலர்
திருமதி. சுமிதா.
உதவி வேளாண்மை அலுவலர்
திரு. சிவானந்தம்.
உதவி வேளாண்மை அலுவலர்
திரு. செல்வம்.
ஆகியோர் பணியாற்றி
வருகின்றனர்.
ஓசூர் உழவர் சந்தையின்
பொங்கல் விற்பனை
2026 ஜனவரி -
13ம் தேதி ---
காய்கறிகள் – 1,06,387 கிலோ.
மலர்கள் - 5261 கிலோ.
கனிகள் - 800 கிலோ.
மதிப்பு - ரூ. 52,62,735 -
14-ம் தேதி ----
காய்கறிகள் - 1,05, 815 கிலோ.
மலர்கள் - 5,460 கிலோ.
கனிகள் – 983 கிலோ.
மதிப்பு – - ரூ. 52,45,110 -
15-ம் தேதி ----
காய்கறிகள் – 1,02,354 கிலோ.
மலர்கள் – 5,145 கிலோ.
கனிகள் – 871 கிலோ.
மதிப்பு - ரூ. 50,32,125 -
16-ம் தேதி ----
காய்கறிகள் – 93,394 கிலோ.
மலர்கள் - 5,393 கிலோ.
கனிகள் – 826 கிலோ.
மதிப்பு – ரூ. 47,86,870 -.
ஜனவரி 13-ம் தேதி முதல்
ஜனவரி 16-ம் தேதி வரை
நான்கு நாட்களில் மட்டும்
ஓசூர் உழவர் சந்தையில்
மொத்தம் ரூ. 2.03 கோடி மதிப்பில்
காய்கறிகள்,
மலர்கள், கனிகள் விற்பனை
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து
வேளாண்மை அலுவலர்
திருமதி. சுமிதா
அவர்கள் கூறியதாவது :-
ஓசூர் உழவர் சந்தை,
தமிழகதத்தில் 2 வது பெரிய
உழவர் சந்தையாகும்.
மற்ற பகுதிகளை விட இங்கு காய்கறிகள் விலை குறைவாகவும், அனைத்து வகையான காய்கறிகள் கிடைப்பதால், ஓசூர் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
வழக்கமான நாட்களை விட
விடுமுறை நாட்கள் மற்றும்
பண்டிகை நாட்களில் அதிகளவில்
காய்கறிகள் விற்பனையாகும்.
அதே போல் நடப்பாண்டு
பொங்கல் பண்டிகையையொட்டி
கடந்த 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை
நான்கு நாட்களில்
காய்கறிகள்
4 லட்சத்து 2 ஆயிரத்து 950 கிலோவும்,
மலர்கள்
21,259 கிலோவும்,
கனிகள்
3,480 கிலோவும்
என மொத்தம் 4,27,689 கிலோ எடையில்
ரூ.2கோடியே ,3 லட்சத்து
26 ஆயிரத்து, 840 மதிப்பில்
விற்பனையாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------.