ஷிர்டி தேசிய தெலுகு மாநாட்டில்
சிறுபான்மை மொழியினருக்கு
அவரவர் தாய் மொழியில் கல்வி
வழங்குவது அரசின் கடமை என்ற
உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்த தீர்மானம்
ஓசூர் தெலுகு சங்க கூட்டத்தில் முடிவு
ஓசூர். நவ. 25. –
by Jothi Ravisugumar
ஷிர்டியில் தெலுகு மாநாடு
மகாராஷ்டிரா மாநிலம், புகழ்பெற்ற சாய்பாபா நகரமான ஷிர்டியில் வருகின்ற நவம்பர் 30-ம் தேதி மற்றும் டிசம்பர் 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் ராஷ்ட்ரேதர தெலுகு சாமாக்யா (தேசிய அளவிலான தெலுகு மாநாடு நடைபெற உள்ளது.
ஓசூரிலிருந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக நவம்பர் 23-ம் தேதியன்று ஓசூர் காமராஜர் காலனியில் இயங்கி வரும் ஆந்திரா சமிதி அரங்கில் மண்டல துணைத்தலைவர் குர்லப்பள்ளி கே.எஸ். கிருஷ்ணப்பா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா ஷிர்டியில் நடக்கும் மாநாட்டுக்கு ஓசூர் பகுதியில்
இருந்து மண்டல துணைத்தலைவர் குர்லப்பள்ளி கே.எஸ். கிருஷ்ணப்பா, ஒருங்கிணைப்பாளர் (ஓய்வு பெற்ற விஏஓ) சீதாராமைய்யா மற்றும் வெங்கடேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஷிரடி செல்ல தீர்மாணிக்கப்பட்டது.
குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்
ஷிர்டி மாநாட்டுக்கு செல்வதற்காக நவம்பர் மாதம் 28-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க, 50-க்கும் மேற்பட்டோருக்கு ரிசர்வேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் சில பேர் விமானம் மூலமாகவும், மேலும் சில பேர் கார்களிலும் ஷிர்டி செல்ல உள்ளனர்.
கட்டாய தமிழ் கல்வி சட்டம் - 2006
1960-களில் தமிழ்நாடு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் சிறுபான்மை மொழியினர் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால் சிறுபான்மை மொழியின மாணவர்களான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள் தங்களுடைய தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதியில்லாமல் நிராகரிப்பட்டு, தமிழில் மட்டும் எழுத அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் சிறுபான்மை மொழியின மாணவர்களில் பலர், தமிழில் தேர்வு எழுத முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள்.
உச்சநீதி மன்றத்தில் வழக்கு
தமிழ்நாட்டில் கட்டாய தமிழ் கல்வி சட்டம் – 2006 என்ற சட்டத்தின் மூலம் தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியினரான தெலுகு, கன்னடம், மலையாளம் மொழியினர் தாய்மொழியில் படிக்க முடியாததால் சில தெலுங்கு சங்கங்கள் மூலமாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தாய்மொழியில் படிக்க கோருவது மாணவர்களின் உரிமை - உச்ச நீதிமன்றம்
அந்த வழக்கில் சிறுபான்மை மொழியினருக்கு அவரவர் தாய் மொழியில் கல்வி வழங்குவது அரசின் கடமை என்றும், மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் படிக்க கோருவது அவர்களின் உரிமை என்றும், அவ்வாறு படித்த மாணவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மார்க்ஸ் கார்டில் பதிவு செய்ய வேண்டும் என கடந்த 21.09.23 அன்று சிவில் அப்பீல் எண் – 744-745-2023-ன்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுபான்மை மொழியினருக்கு அவரவர் தாய் மொழியில் கல்வி வழங்குவது அரசின் கடமை - உச்ச நீதிமன்றம்
இந்த தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அமல் படுத்த கோரி ஷிர்டியில் நடைபெறும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் தரப்படும் எனவும் ஓசூர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.