கிருஷ்ணகிரி மாவட்ட
செய்தி மக்கள் தொடர்பு
அலுவலக வாகனங்கள்
27.02.2026 அன்று
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியரக வளாகத்தில்
பொது ஏலம் விடப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார்.இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. பிப். 20. -
செய்தி மக்கள் தொடர்பு
அலுவலக வாகனங்கள்
பொது ஏலம்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு
அலுவலக வாகனங்கள்
27.02.2026 அன்று
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்
பொது ஏலம் விடப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார்.இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்ட
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில்
(Tempo Trax (D)) TN 04 G 0542
மற்றும்
டெம்போ டிராவலர்
(Tempo Travellers (D)) TN 04 G 0536
ஆகிய இரண்டு வாகனங்கள்
முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாகனங்கள் தற்போது
எந்த நிலையில் உள்ளதோ,
அதே நிலையில்
வருகின்ற 27.02.2026 அன்று காலை 11 மணிக்கு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள்
வருகின்ற 27.02.2026 அன்று
காலை 10 மணி முதல் 10:30 மணிக்குள்
நுழைவுக் கட்டணமாக
ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்)
மற்றும்
நான்கு சக்கர வாகனத்திற்கான
முன்வைப்புத் தொகையாக
ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்)
செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அரசு நிர்ணயித்த தொகையை
விடக் கூடுதலாகக் கோரி
ஏலம் எடுத்த ஏலதாரர்.
ஏலத் தொகை முழுவதையும் (100%),
அதற்கான ஜி.எஸ்.டி தொகையையும்
ஏலம் எடுத்த அன்றே அலுவலகத்தில்
செலுத்த வேண்டும்.
அதன் பின்னரே. ஏலதாரருக்கு
வாகன விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டு வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஏலத்தை உறுதி செய்தவரைத் தவிர,
ஏலத்தில் பங்கேற்ற இதர நபர்களுக்கு
அவர்கள் முன்பணமாகச் செலுத்திய
ரூ.2000/- மீண்டும் வழங்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------.