தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில்
மூதறிஞர் ராஜாஜி 146-வது
பிறந்த நாள் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர்
மேயர் பங்கேற்பு
ஓசூர். டிச. 10. –
மூதறிஞர் ராஜாஜி இல்லம்
மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 146-வது பிறந்த நாளையொட்டி, ராஜாஜி பிறந்த இல்லத்தில்,
ராஜாஜியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட
ஆட்சித்தலைவர் கே.எம். சரயு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
கே.எம். சரயு IAS
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, மூதறிஞர் ராஜாஜி
அவர்களின் 146-வது பிறந்த நாள் முன்னிட்டு மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லத்தில் பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (10.12.2024) இன்று நடைபெற்றது.
மேயர் எஸ்.ஏ.சத்யா
இந்த விழாவில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகித்து
மூதறிஞர் ராஜாஜியின் திருவுருவ
படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, ராஜாஜி பிறந்த இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மூதறிஞர் ராஜாஜி -
வாழ்க்கை வரலாறு
புகைப்பட கண்காட்சி
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
மூதறிஞர் ராஜாஜி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் ஆகியோருக்கு
இனிப்புகளை வழங்கினார்.
ஓசூர் – தொரப்பள்ளி வழி தடத்தில்
கூடுதல் பேருந்து வசதி -
மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடி
உத்தரவு
இந்த நிகழ்வில் தொரப்பள்ளி பிரமுகர் ராமமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.
அதில், 10கி.மீ. தொலைவு உள்ள தொரப்பள்ளி – ஓசூர் வழித்தடத்தில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள 12-வது படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்,
ஓசூருக்கு தினமும் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே ஓசூர் – தொரப்பள்ளி வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மனுவை, படித்த மாவட்ட ஆட்சித்தலைவர்,
உடனடியாக மனுவில் கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்து உடனடியாக கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
எச்.எஸ். ஸ்ரீகாந்த், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) அ.க.ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்(கட்டிடம்) அருள், ஓசூர் வட்டாட்சியர் சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் உமா சீனிவாசலு, ஊராட்சி மன்றத் தலைவர் வி.சாந்தம்மா நஞ்சப்பா, ராமு, ஊராட்சி மன்ற செயலாளர் எஸ்.சந்திரசேகர் மற்றும் தொரப்பள்ளி பிரமுகர் ராமமூர்த்தி, நாடக கலைஞர் ராமமூர்த்தி, அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.