ஓசூர் மாநகராட்சியில்
மார்கதர்சி சிட்ஃபண்டின் 120-வது கிளை
நிர்வாக இயக்குநர்
சைலஜா கிரண்
திறந்து வைத்தார்
எம்எல்ஏ, மேயர்
பங்கேற்பு
ஓசூர். டிச. 11. –
ஓசூர் மார்கதர்சி சிட்ஃபண்ட்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரில் சிட்ஃபண்ட் துறையில் மக்களிடையே
நம்பகத்தன்மையுடன், முன்னணி நிறுவனமாக
திகழும் மார்கதர்சி சிட்ஃபண்ட் 120-வது கிளை
திறப்பு விழா நடைபெற்றது.
ராமோஜி குழுமம்
ராமோஜி குழுமத்தின் மார்கதர்சி சிட்ஸ் நிறுவனம்
1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக சிட்ஃபண்ட் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முக்கிய நிறுவனமாக திகழ்கிறது.
ஆந்திரப்பிரதேம், தெலங்கானா, தமிழ்நாடு,
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள 119 கிளைகளில்
60 லட்சத்துக்கும அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ள மார்கதர்சி சிட்ஃபண்ட்
நிறுவனம், ரூ.9 ஆயிரம் கோடிக்கும்
அதிகமான டர்ன் ஓவர் செய்துள்ளது.
120-வது கிளை
தமிழ்நாட்டின் தொழில்நகரமான
ஓசூர் காமராஜ் காலணியில் இன்று(டிசம்பர் 11) தனது 120-வது கிளையை திறந்துள்ளது.
நிர்வாக இயக்குநர்
சைலஜா கிரண்
இந்த புதிய கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மார்கதர்சி சிட்ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
சைலஜா கிரண் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி,
திறந்து வைத்தார்.
ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
முன்னதாக டிசம்பர் 11-ம் தேதி காலை கர்நாடகா மாநிலம் பெங்களுரு கெங்கேரியில் மார்கதர்சி
சிட்ஃபண்ட் நிறுவனத்தின் 119-வது கிளை திறக்கப்பட்டது.
ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா,
துணை மேயர் ஆனந்தய்யா
ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
“குட்டி இங்கிலாந்து” ஓசூர்
திருமதி செருகுரி சைலஜா
கிரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஓசூரை ஆங்கிலேயர் காலத்தில் குட்டி
இங்கிலாந்து என அழைத்தனர். அதற்கு காரணம் ஓசூர் பகுதி எப்பொழுதும் குளிர்ந்த தட்பவெட்ப நிலை உள்ள பகுதியாக
இருக்கிறது.
ஓசூரை ரோஜா நகரமென்றும் அழைக்கிறார்கள்.
தமிழகத்தில் 18-வது கிளை
இன்று கர்நாடகா மாநிலத்தில் 119-வது கிளையை திறந்து வைத்த நான்,
தமிழகத்தில் 18-வது கிளை மற்றும் மார்கதர்சி நிறுவனத்தின் 120-வது கிளையை ஓசூரில் இன்று திறந்து வைத்துள்ளேன்.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம்
கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என 4 மாநிலங்களில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளோம். எங்களிடம் எளிய மக்கள் தங்களது பணத்தை
சேமிக்கும் வகையில் மாதந்தோறும் குறைந்த
தொகை முதல் சீட் நடத்துவதால் கல்வி,
தொழில், விவசாயம், குடும்பத்தின் பிற
தேவைகளுக்காக பணத்தை சேமிக்கின்றனர்.
தொழில் நகரம் ஓசூர்
பெங்களுரு நகருக்கு அருகாமையில் உள்ள
800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓசூர் நகரத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன.
குறிப்பாக அசோக் லைலாண்டு, டிவிஎஸ், நெரோலக், டைட்டான் என பல
தொழிற்சாலைகள், தொழிலாளர்கள்
இருப்பதால் அவர்களின் நலனுக்காக எங்களது
நிறுவனம் பயன்படும்.
சிட்ஸ் சம்பந்தமாக அரசின் விதிமுறைகளுக்கு
உட்பட்டு அரசு சட்ட திட்டங்களை மதித்து
அனைத்தும் முறையாக நடத்தப்படுகிறது.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின்
நன்மதிப்பை காப்பாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களுரு கெங்கேரியில்
119-வது கிளை
முன்னதாக டிசம்பர் 11-ம் தேதி காலை
11 மணிக்கு கர்நாடகா மாநிலம் பெங்களுரு கெங்கேரியில் மார்கதர்சி
சிட்ஃபண்ட் நிறுவனத்தின் 119-வது கிளை திறக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின்
மாவட்ட தலைவர் முரளிதரன்
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின்
மாவட்ட தலைவர் முரளிதரன், தொழிலதிபர் மாரசந்திரம் ராமசாமி, கவுன்சிலர் தாஜ்,
புஷ்பா சர்வேஸ்.
ஓய்வுபெற்ற சிடிஓ கமிஷனர் குரப்பா,
ஓய்வு பெற்ற விஏஓ சீதாராமன்,
சிபிஐ பிரமுகர் கே.எஸ்.கிருஷ்ணன்,
கம்மவாரி பவனம் தலைவர் கோபால்,
தொழிலதிபர் அக்ரி முனுசாமி,
கக்கனூர் நாகராஜ்,
காங்கிரஸ் பிரமுகர் மைசா அக்பர்,
திருமலைகோட்டை தொழிலதிபர்
எல்லப்பா,
தொழிலதிபர் எல்.சி. கோபால்,
ஈநாடு பத்திரிகை
மூத்த நிருபர் ராமச்சந்திரன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழா இறுதியில்
ஓசூர் கிளை மேலாளர் ராஜீவ் நன்றி கூறினார்.