ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர் - 1. இதழ்கள் - 146
ஓசூர் மாபெரும் ரத்த தானம் முகாம்
Hosur Blood Donation Camp
Hosur Blood Donation Camp
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
ஓசூர் இம்பேக்ட் அரிமா சங்கம்,
முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்,
துவாரக நகர் குடியிருப்போர்
நலச்சங்கம்,
ஜெயம் ஸ்பெஷாலிட்டி
கிளினிக் இணைந்து
மாபெரும் ரத்ததான முகாம்
45 யூனிட் ரத்தம் சேகரிப்பு
ஓசூர், பிப். 17. –
ஓசூர் இம்பேக்ட் அரிமா சங்கம்,
முனீஸ்வர் நகர், 22-வது வார்டு மற்றும் துவாரக நகர் குடியிருப்போர் நலச்சங்கங்கள், ஜெயம் ஸ்பெஷாலிட்டி கிளினிக் ஆகியவை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
மாநகர பொது சுகாதாரக்குழு
தலைவர் மாதேஸ்வரன்
ஓசூர் முனீஸ்வர் நகர், ரிங்ரோடு,
ஜெயம் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் நடந்த இந்த ரத்ததானம் முகாமை
மாநகர பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
மேலும் ரத்ததானம் செய்த பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பூச்செடிகளை வழங்கினார்.
இந்த முகாமில் ரத்த தானம் வழங்கிய பொதுமக்கள் பலர் தங்களது ரத்த வகையை கண்டறிந்து கொண்டனர்.
மேலும் உடலின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
ஜெயம் ஸ்பெஷாலிட்டி கிளினிக்
டாக்டர். செல்வக்குமார்,
டாக்டர். பிரபாகரன்,
தலைமையிலான மருத்துவ குழுவினர்,
அரிமா சங்க ரத்த வங்கி மூலம்
ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ரத்த தானம் முகாமில் 45 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
ஓசூர் கரிசல் காட்டு பூவே
அறக்கட்டளை
சார்பில் ரத்தம் தானமாக வழங்கியவர்களுக்கு
இலவசமாக
பூச்செடிகள்
வழங்கப்பட்டது.
இந்த முகாமில் முனீஸ்வர் நகர்
குடியிருப்போர் நலச்சங்க தலைவர்
பிரகாஷ்,
இம்பேக்ட் அரிமா சங்க தலைவர்
அரிமா. மது சந்திரசேகர்,
செயலாளர்கள்
அரிமா. டி. மணி,
அரிமா. ஹரி,
பொருளாளர்
அரிமா. ஆர். ஆறுமுகம்,
ஓசூர் இம்பேக்ட் அரிமா சங்க
முன்னாள் தலைவர்
அரிமா. சூர்யபிரகாஷ்,
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
சேவை திட்டத் தலைவர்
அரிமா. ரவிசங்கர்.
மற்றும் ராஜதுரை, நந்தகுமார்,
கருணாநிதி, பாபு
உட்பட பலர் கலந்து கொண்டனர்.