கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மத்திகிரியில்
வரலாற்று சிறப்பு வாய்ந்த
நூற்றாண்டு பாரம்பரியமிக்க
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகளோடு
அழகிய குடில் அமைத்து
கிறிஸ்துமஸ் விழா
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல்
உற்சாகமாக பங்கேற்ற இறைமக்கள்
ஓசூர். டிச. 25. –
கிறிஸ்துமஸ் பண்டிகை
சிறப்பு ஜெப வழிபாடு
ஓசூர் மாநகராட்சி மத்திகிரி
குதிரைப்பாளையத்தில் உள்ள
நூற்றாண்டுகள் பழமையான
பாரம்பரிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம் மற்றும்
மத்திகிரி நேதாஜி நகரில் உள்ள
புதிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
ஆகிய இரண்டு ஆலயங்களிலும்
கிறிஸ்துமஸ் பண்டிகை
சிறப்பு ஜெப வழிபாடு
நடைபெற்றது.
பாரம்பரிய ஆலயம்
மத்திகிரி குதிரைப்பாளையத்தில் அமைந்துள்ள
நூற்றாண்டுகள் பழமையான
பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை
சிறப்பு ஜெப வழிபாடு
டிச. 24-ம் தேதியன்று இரவு 8 மணிக்கு
நடைபெற்றது.
தென்னை ஓலையில் அழகிய குடில்
மத்திகிரி பாரம்பரிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
பழங்காலத்தை நினைவு படுத்தும் வகையில்
தென்னை ஓலையில்
பாரம்பரியமிக்க
அழகிய குடில் அமைக்கப்பட்டு
சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை
ஆலய பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
தலைமையில்
கிறிஸ்து பிறப்பு வாழ்த்து திருப்பாடல்களுடன்
சிறப்பு திருப்பலி, சிறப்பு மறையுரை மற்றும் நற்கருணை ஆராதனை ஆகிய சிறப்பு ஜெப வழிபாடுகள் நடைபெற்றது.
இந்த சிறப்பு ஜெபத்தில்
புனித ஆரோக்கிய அன்னை ஆலய
உதவி பங்கு தந்தை
அருட்பணி அன்பு,
அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர்,
நூற்றுக்கனக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.
அனைவருக்கும் அறுசுவை உணவு
வழங்கப்பட்டது.
மத்திகிரி நேதாஜிநகர் ஆலயம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு
மத்திகிரி நேதாஜி நகரில் அமைந்துள்ள
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு
கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெப வழிபாடு
நடைபெற்றது.
இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகளோடு
அழகிய குடில்
மத்திகிரி நேதாஜி நகர்
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
குழந்தை இயேசு பிறப்பின்
வரலாற்று நிகழ்வுகளை
நினைவு கூறும் வகையில்
இயற்கை எழில் சூழ்ந்த
காட்சிகளோடு கிறிஸ்து பிறந்த குடில்
தத்ரூபமாக
வடிவமைக்கப்பட்டிருந்தது.
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை
ஆலய பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
தலைமையில்
கிறிஸ்து பிறப்பு வாழ்த்து திருப்பாடல்களுடன்
சிறப்பு திருப்பலி, சிறப்பு மறையுரை மற்றும் நற்கருணை ஆராதனை ஆகிய சிறப்பு ஜெப வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் மத்திகிரி புனித
ஆரோக்கிய அன்னை ஆலய
உதவி பங்கு தந்தை
அருட்பணி அன்பு,
மற்றும் அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர்,
நூற்றுக்கனக்கான பங்கு மக்கள்
கலந்து கொண்டனர்.
இறை மக்கள் ஒருவருக்கொருவர்
கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.
ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதேபோல மத்திகிரி
புனித ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் டிசம்பர் 25-ம் தேதி
காலை 9-00 மணிக்கு
கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெப வழிபாடு
நடைபெற்றது.
இந்த கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெப வழிபாட்டில்
ஓசூர் மறை வட்ட
முதன்மை குரு
அருட்பணி பெரிய நாயகம்
மற்றும்
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை
ஆலய பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
ஆகியோர் பங்கேற்று
கிறிஸ்து பிறப்பு வாழ்த்து திருப்பாடல்களுடன்
சிறப்பு திருப்பலி, சிறப்பு மறையுரை மற்றும் நற்கருணை ஆராதனை ஆகிய சிறப்பு ஜெப வழிபாடுகள் நடைபெற்றது.
மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலய
உதவி பங்குதந்தை
அருட்பணி அன்பு,
மற்றும் அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர்,
நூற்றுக்கனக்கான பங்கு மக்கள்
கலந்து கொண்டனர்.
-----------------------------------.