குழந்தைகள் நலன் மற்றும்
சிறப்புச் சேவைகள் துறை
கிருஷ்ணகிரி மாவட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக
சிறப்பு சிறார் காவல் அலகில்
காலியாக உள்ள
சமூகப்பணியாளர்
பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 1. –
கிருஷ்ணகிரி மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக
சிறப்பு சிறார் காவல் அலகில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ்,
கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதில், சிறப்பு சிறார் காவல் அலகில்
காலியாக உள்ள
1 சமூகப்பணியாளர் பணியிடத்திற்கு
தொகுப்பூதியம் மாதம் ரூ.18,536/- வீதத்தில்
ஒப்பந்த அடிப்படையில்
மிஷன் வாத்சல்யா வழிகாட்டு நெறிமுறைகளின் படி
கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
1. சமூகப்பணியாளர் (Social Worker)-1 பணியிடம்
சமூகப்பணி (Social Work) /
சமூகவியல் (Sociology) /
சமூக அறிவியல் (Social Science)
ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்துடன் கணினியில் அறிவுத்திறமை பெற்றிருக்க வேண்டும்.
மேற்காணும் தகுதிகளுடன் சமுகப்பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
30.06.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
குழந்தைகள் நலன் தொடர்புடைய பணிகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களையும் இணைத்து
13.11. 2025 அன்று மாலை 5.30 மணிக்குள்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
அறை எண். 100, 2வது தளம்.
மாவட்ட ஆட்சியரகம்,
கிருஷ்ணகிரி 635115.
தொலைபேசி எண். 04343-292567. 6382613358
என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
மேலும் விண்ணப்பங்களை
(https://krishnagiri.nic.in/)
என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும்
மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை
தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------------.