கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஆண்டு விழா கொண்டாட்டம்
50 ஆண்டுகளில் முதல் முறையாக
22 கலை நிகழ்ச்சிகளில்
பங்கேற்ற மாணவர்கள்
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்கள்
பங்கேற்பு
ஓசூர். மார்ச். 8. –
தொரப்பள்ளி அரசு
நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரம்
ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில்
22 கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தரமான கல்வி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தொரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில்
1-வது வகுப்பு முதல்
8-வது வகுப்பு வரை 193 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு ஒரு தலைமையாசிரியர்
உட்பட 10 ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு
நல்லொழுக்கத்துடன், தரமான
கல்வி கற்பிக்கப்படுகிறது.
கல்வி செயலி(APP)
இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை எளிதாக கற்பிக்கும் வகையில்
54 கல்வி செயலிகள்(APP) வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த அரசுப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
ஆண்டு விழா
இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்றுள்ள இந்த அரசுப்பள்ளியின் ஆண்டுவிழா மார்ச் 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை
தொரப்பள்ளி ஊராட்சிமன்றத்
தலைவி சாந்தம்மா
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
வரவேற்புரை
8-வது வகுப்பு மாணவர் வீக்ஷித் ஆங்கிலத்தில் சிறப்பாக பேசி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
மாணவி திவ்யாஸ்ரீ -
தமிழ்நாடு அரசின்
கல்வி திட்டங்கள் மற்றும்
விலையில்லா கல்வி பொருட்கள்
வழங்கும் திட்டங்கள் பற்றி
சிறப்பாக உரையாற்றினார்.
பள்ளி ஆண்டறிக்கை
பள்ளியின் ஆண்டறிக்கையை
உதவி தலைமையாசிரியர்
P.M. பிரசாத்
வாசித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
ஓசூர் வட்டாரக் கல்வி அலுவலர்
சதீஷ்குமார்,
வட்டாரக் கல்வி அலுவலர்
அன்னய்யா,
வட்டாரக் கல்வி அலுவலர்
டி.டி.ராஜு,
ஓசூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர்
சி.குமரவேல்,
ஓசூர் வட்டார வள ஆசிரியர்
பயிற்றுநர்
எஸ்.செந்தில்குமார்,
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கவுரவிப்பு
விழாவில் பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் காலி நிலம்
நன்கொடையாக
வழங்கிய
ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர்
வி.கிருஷ்ணமூர்த்தி
யின் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து,
நினைவு பரிசு வழங்கி
கவுரவித்தனர்.
பரிசளித்து பாராட்டு
இந்த ஆண்டு விழாவில் பாடத்தில்
அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த ஒவ்வொரு வகுப்பிலும் 3 மாணவர்களை பாராட்டி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பள்ளிக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கும் 10 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
“புதிய சேர்க்கை பெற்ற
மாணவர்களுக்கு
சந்தனமாலை அணிவித்து
ரொக்கப்பரிசு”
அடுத்த கல்வியாண்டில்
1-ம் வகுப்பில் படிக்க புதியதாக சேர்க்கை பெற்ற 10 மாணவர்களுக்கு சந்தனமாலை அணிவித்து தலா ரூ.200 பரிசாக வழங்கப்பட்டது.
22 கலை நிகழ்ச்சிகள்
இந்த ஆண்டு விழாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக 22 விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சிறப்பாக பங்கேற்று அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
பிரமிட்
குறிப்பாக 6, 7, 8 -வது வகுப்பு மாணவர்கள் பிரமிட் வடிவில் ஒன்றிணைந்து, உச்சியில் தேசிய கொடி ஏந்தி நின்ற காட்சி காண்போரை வியக்க வைத்தது.
இந்த அனைத்து
கலை நிகழ்ச்சிகளையும்
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக
பணியாற்றி வரும்
ஆசிரியை பவித்ரா
ஆசிரியை ஷர்மிளா
ஆகியோர் சிறப்பாக
செய்திருந்தனர்.
இந்த ஆண்டு விழாவில்
முன்னாள் ஊராட்சி மன்ற
தலைவர்கள்
நாராயணப்பா,
வெங்கடேஷப்பா,
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்
T.கோபாலப்பா,
SMC தலைவி
சந்திரம்மா,
SMC துணைத்தலைவர்
கொண்டப்பா,
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்
உமா சீனிவாசன்,
வார்டு உறுப்பினர்கள்
கீதா சுப்பிரமணி,
சத்தியவேலு,
PWD வாய்க்கால் தலைவர்
அப்பைய்யா,
ஆகியோர் பங்கேற்றனர்.
அறுசுவை உணவு
அனைத்து SMC உறுப்பினர்கள் சார்பில்
மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நன்றியுரை
தலைமையாசிரியர்
N.S. பிரசாத்
நன்றி உரையாற்றினார்.
பள்ளி ஆண்டு விழா ஏற்பாடுகளை
தலைமையாசிரியர்,
உதவி தலைமையாசிரியர்,
மற்றும் ஆசிரியர்கள்
மகேஷ்,
ஜெகதீஸ்வரி,
வாசுதேவ ராஜு,
சத்யா,
முனிரத்னா,
சக்திசெல்வி,
ஆகியோர்
சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த ஆண்டு விழாவில்
ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் பெற்றோர்,
பொதுமக்கள் உட்பட 1000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
---------------------------------------------.