ஒசூர் மாநகராட்சியில்
கோசாலை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பொதுசுகாதார குழு கூட்டத்தில்
சாலைகளில் சுற்றித்திரியும்
கால்நடைகளுக்கு
கோசாலை அமைக்க தீர்மானம்
பொது சுகாதார குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்
பங்கேற்பு
ஓசூர், பிப்.3. -
ஓசூர் மாநகராட்சி நகரப்பகுதிகளில் சுற்றிதிரியும் கால்நடைகளுக்கு புதிய கோசாலை அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
பொதுசுகாதார குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோசாலை
ஓசூர் மாநகராட்சி பகுதியில் பிடிக்கப்படும் மாடுகளை பராமரிக்க கோசாலை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி பிற்பகல் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர
பொது சுகாதாரக் குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்
அவர்கள் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கமிஷனர்
திரு. முகம்மது ஷபீர் ஆலம்,
மாநகர நல அலுவலர்
திருமதி. அஜிதா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில்
மாநகராட்சி பகுதியில் உள்ள
அனைத்து பள்ளி மாணவ, மாணவியரின்
துணிகள், புத்தகம், பொம்மைகள்,
எலக்ட்ரானிக் கழிவுகளை
மறு பயன்பாடு,
மறுசுழற்சி செய்ய மையம்
அமைக்க வேண்டும்.
பள்ளிகளில் சேரும் மக்கும் குப்பைகளை
அங்கேயே உரமாக்கும் வகையில்
உர மையம் அமைக்க வேண்டும்.
ஓசூர் மலைக்கோவில்
தேரோட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவறைகள் அமைக்க வேண்டும்.
என்பது உட்பட
8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில்
பொது சுகாதாரக்குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்
பேசியதாவது:
ஓசூர் மாநகராட்சி தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து,
அவற்றை பராமரிக்க
ஆனந்த் நகர் நுண்ணுர செயலாக்க மையத்தில்
ரூ.30 லட்சம் மதிப்பில் கோசாலை அமைக்க
அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாநகர பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது.
ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் வழங்கப்படுகிறது.
இதை தடுத்து அதிகளவில் அபராதம்
விதிக்க வேண்டும்.
ஓசூர் மலைக்கோவில் தேரோட்டம்
அடுத்த மாதம் 3ம் தேதி
அதிகாலை 5.30 மணிக்கு துவங்க உள்ளது.
அதனால் பக்தர்களுக்கு கழிப்பறை,
உடை மாற்றும் அறை மற்றும்
குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது
போன்ற பணிகளை சரியான முறையில்
செய்ய வேண்டும்.
சினிமா தியேட்டர்களில் கழிவறைகள்
மோசமாக உள்ளது.
அங்கு அதிகாரிகள்
ஆய்வுக்கு செல்வதில்லை.
உணவு பொருட்களில் கலரிங் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள்
ஆய்வு செய்யாமல் உள்ளனர்.
புற்று நோய் ஏற்படும் முன்,
உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஓசூர் மாநகராட்சியில்
முனீஸ்வர் நகர்,
நேரு நகர்,
இமாம்படா
ஆகிய 3 இடங்களில்
புதிதாக அரசு துணை சுகாதார நிலையங்கள்
அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் இதற்காக
ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டடங்கள்
கட்டப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில்
மாநகராட்சி கவுன்சிலர்கள்
மோசின் தாஜ்,
லட்சுமி மற்றும்
ஆரம்ப சுகாதார நிலைய மற்றும்
ஓசூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
--------------------------------------.