கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் டிவிஎஸ் நகரில்
நகர்ப்புற சிறப்பு மருத்துவ சேவை
மையம் திறப்பு
எம்.எல்.ஏ. பிரகாஷ்,
மேயர் சத்யா பங்கேற்பு
ஒசூர். ஜூலை. 19. –
ஓசூர் டிவிஎஸ் நகரில்
நகர்ப்புற சிறப்பு மருத்துவ
சேவை மையம் திறப்பு விழா
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டிவிஎஸ் நகரில்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நகர்ப்புற சிறப்பு மருத்துவ சேவை மையம்
திறப்பு விழா நடைபெற்றது.
இந்த மருத்துவ சேவை மையத்தை காணொளி காட்சி வாயிலாக
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியம்
திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து
ஓசூர் டிவிஎஸ் நகர் நகர்ப்புற சிறப்பு மருத்துவ சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ்,
மேயர் எஸ்.ஏ. சத்யா,
மற்றும்
மாநகராட்சி ஆணையாளர் சபீர் ஆலம்,
மாநகராட்சி நகர் நல அலுவலர் அஜிதா,
துணை மேயர் ஆனந்தய்யா,
மாநகர வரிக்குழு தலைவர் சென்னீரப்பா,
எல்.பி.எஃப். கோபாலகிருஷ்ணன்,
ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.
இந்த சேவை மையத்தில்
பொது மருத்துவம்,
மகப்பேறு மருத்துவம்,
கண் மருத்துவம்,
இயன்முறை மருத்துவம்,
தோல் மருத்துவம்,
பல் மருத்துவம்,
மனநல மருத்துவம்,
ஆகியவை மருத்துவ பிரிவுகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்