கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சட்டப்பேரவை தொகுதி
பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர்
கோரிக்கையை ஏற்று
பாகலூர் கோட்டை மாரியம்மன்
கோயிலுக்கு
வெள்ளிக் கவசம் காணிக்கை
வழங்கிய
ஒசூர் எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்.
ஒசூர். செப். 26. -
ஓசூர் எம்.எல்.ஏ. குடும்பத்தினர்
வெள்ளிக்கவசம் காணிக்கை
ஓசூர் ஒன்றியம் பாகலூர் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக் கவசம் காணியாக்கையாக
ஒசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
குடும்பத்தினர் வழங்கினார்கள்.
பழமையான பிரசித்தி பெற்ற
பாகலூர் கோட்டை மாரியம்மன் கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட ஒசூர் ஊராட்சி ஒன்றியம் பாகலூரில் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம்.
இந்தப் பகுதியில் ஆட்சி செய்து வந்த பாளையத்துகாரர்கள், இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.
பாகலூர் பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் நிர்வாகத்தினர் சார்பில், கோட்டை மாரியம்மனுக்கு வெள்ளிக் கவசம் காணிக்கை சாத்த வேண்டும் என எம்.எல்.ஏ. பிரகாஷிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர்.
அம்மனுக்கு வெள்ளிக்கவசம் காணிக்கையாக செலுத்த முன்வந்தனர்.
அதன்படி பாகலூர் கோட்டை மாரியம்மனுக்கு வெள்ளிக்கவசம் செய்ய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர்கள் மூலம் சுவாமியின் அளவெடுக்கப்பட்டு, கடந்த 6 மாத காலம் வெள்ளிக் கவசம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அம்மனுக்கு வெள்ளி கவசம் செய்யும் பணி நிறைவு பெற்று, வெள்ளி கவச காணிக்கை ஒப்படைக்கும் விழா புரட்டாசி மாதம் செப்.26-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில்
ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ்
அவரது சகோதரர்
திரு. சந்திரப்பா,
டாக்டர். சிந்து,
திரு.சீனிவாசன்
ஆகியோர் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் செய்து மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக் கவசம் காணிக்கையாக வழங்கினர்.
இந்த விழாவில்
மாவட்ட பொருளாளர்
சுகுமாரன்,
துணை மேயர்
ஆனந்தய்யா,
ஒன்றிய செயலாளர்கள்
கஜேந்திர மூர்த்தி,
நாகேஷ்,
லோகேஷ் ரெட்டி,
ராமமூர்த்தி,
சீனிவாசலு ரெட்டி,
முன்னாள் ஒன்றிய குழு தலைவர்
சர்வேஷ்,
ஒன்றிய நிர்வாகிகள்
நாகராஜ்,
பாபு,
பெலத்தூர் ரமேஷ் ,
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்
சிவசங்கர்,
முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள்
சம்பத்குமார்,
கோபால்,
தியாகராஜ்,
ரமேஷ்,
பேரிகை பிரவீன்குமார்,
மணிகண்டன்,
முனிராஜ்,
சம்பத்குமார்,
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில்
2000 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
--------------------------------------------------.