கலிபோர்னியம்
(Californium)
என்பது கதிரியக்கத் தன்மை
கொண்ட உலோகத் தனிமம்.
மார்ச் – 17 - 1950 –
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் "கலிபோர்னியம்" என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்த நாள்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். 17. -
கலிபோர்னியம்
(Californium) என்பது கதிரியக்கத் தன்மை கொண்ட உலோகத் தனிமம்.
இதன் குறியீடு Cf, அணு எண் 98, அணு நிறை 248. இத்தனிமம் முதற்தடவையாக 1950 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கியூரியம் ஆல்ஃபா துகள்களால் மோத விடப்பட்ட போது பெறப்பட்டது.
ஆக்டினைடு வரிசையில் உள்ள இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களில் ஆறாவதாகும்.
கலிபோர்னியம் 252 என்னும் இதன் ஓரிடத்தான் அண்மைக்கதிர் மருத்துவத்தில் பயன்படுகிறது.
மிகவும் மாறுபட்ட
நியூட்ரான்களை கொடுக்கும் ஒரு தனிமமாகும் காலிபோர்னியம் 252 .
இது தோற்றுவிக்கப் பட்டவிதம் விந்தையானது.
யுரேனிய பிளவை ஆய்விலும்
அணு ஆற்றல் ஆய்வின்
பலனாகவும் பெறப்பட்ட
தனிமம் இது.
புளுட்டோனியம் தனிமத்தினை
அதிக செறிவுடைய
நியூட்ரான் பாய்வில்
வைக்கும் போது,
புளுட்டோனியம்
காலிபோர்னியமாக
மாற்றம் பெறுகிறது.
காலிபோர்னியத்தினை
பெறுவது கடினமானது
எனினும் மருத்துவத்திற்குப்
போதுமான அளவு
ஐக்கிய அமெரிக்க நாட்டில்
இது தோற்றுவிக்கப்பட்டுளது.
ஆய்விற்காக சில கதிர் மருத்துவ மையங்களுக்கு அதனைக் கொடுத்து உதவி இருக்கிறார்கள்.
கதிரியக்கம் மூலம்
சிதைவுறும் போது இது நியூட்ரான்களையும் வெளிப்படுத்துகிறது. 97% காலிபோர்னியம் ஆல்ஃபா
துகளைகளை உமிழ்கின்றன.
இத்துகள்கள் கொள்கலனின்
சுவர்களில் தடுக்கப்பட்டு
விடுகின்றன.
மருத்துவத்தில்
அதன் பங்கு இல்லை.
நியூட்ரான்களின் கதிர்வீச்சளவு
காமாக் கதிர்களைப்போல்
1.7 மடங்கு அதிகமாக
உள்ளது.
இந்த அளவுகள்
ஒரு செ.மீ. தொலைவிற்கு அப்பால் இவ்வேற்பளவுகள் மாற்றம் கொள்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் காலிபோர்னியம் சிதைவின் போது தோன்றும் சில சேய்தனிமங்களில் இருந்து தோன்றும் காமாக் கதிர்களே ஆகும்.
கலிபோர்னியம் தரும்
நியூட்ரான்களின் ஒப்பு கதிரியல் விளைவு கூடுதலாக உள்ளது கவனிக்கப்பட வேண்டும்.
கலிபோர்னியத்தின்
ஒப்பு உயிரியல் விளைவு
மூன்று என்று எடுத்துக் கொண்டால்
ஒரு மைக்ரோ கிராம்
காலிபோர்னியம் 252 வும் ஒரு மில்லிகிராம் ரேடியமும் ஒரே விளைவுகளைக் கொடுப்பதாகக்
கொள்ளலாம்.
-------------------------------------.