ஒவ்வொரு ஆண்டும்,
பிப்ரவரி 24 இந்தியா முழுவதும்
“மத்திய கலால் தினமாக”
அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி. 24 –
மத்திய கலால் வரி தினம்!
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 24. –
மத்திய கலால் தினம்
ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 24 இந்தியா முழுவதும் “மத்திய கலால் தினமாக” அனுசரிக்கப்படுகிறது.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் (Central Board of Indirect Taxes and Customs - CBIC)
சேவையை கவுரவிப்பதற்காக
இந்த நாள்
அனுசரிக்கப்படுகிறது.
சுங்கம்,
மத்திய கலால்,
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி,
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும்
சேவை வரி
மற்றும் போதைப்பொருள் தொடர்பான விஷயங்களுக்கான தேசிய நிர்வாக அதிகாரம் சிபிஐசி ஆகும்.
சிபிஐசி நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இன்றைய தினம் மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நேர்மையோடு வரி வசூல் தொடர்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
வரி செலுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்தூக்கம் ஏற்படுத்தும் வகையில் பல வொர்க் ஷாப்களையும் செமினார்களையும் நடத்துவார்கள்.
எக்ஸைஸ் என்ற சொல் டச் மொழியில் ஆக்சிஜன் என்ற சொல்லிலிருந்து வந்தது.
இந்தச் சொல்லின் லத்தீன் வேர்ச்சொல் வரி விதிப்பது என்று பொருள் தருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் எடுத்து வருகிறது. ஒவ்வொருவரும் அரசு எக்ஸைஸ் வரி எத்தனை விதிக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடனும் அச்சத்துடனும்
கவனித்து வருவர்.
இந்த வரியின் தாக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். பொருட்களை உற்பத்தி செய்வோர் நேரடியாக அரசுக்கு வரி செலுத்துகையில், பயனடைவோர் உற்பத்தியாளருக்கும் வியாபாரிகளுக்கும் செலுத்துவர்.
1944-ல் ஏற்படுத்தப்பட்ட
சென்ட்ரல் எக்சைஸ் அண்ட் சால்ட் சட்டப்படி இந்த வரிகள் விதிக்கப்படுகின்றன.
-----------------------------------------------.