உங்க கனவ சொல்லுங்க
சமூக ஊடகப் போட்டிகள்
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு. க. ஸ்டாலின்
அவர்கள்,
"எல்லோருக்கும் எல்லாம்"
என்ற உயரிய நோக்குடன்
பொதுமக்கள் தங்களது எண்ணங்கள்,
கருத்துகள் மற்றும் கனவுகளை
அரசுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்
'உங்க கனவ சொல்லுங்க'
என்ற முன்னெடுப்பை
9.01.2026 அன்று
தொடங்கி வைத்தார்கள்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின்
ஊடக மையம்
'உங்க கனவ சொல்லுங்க'
கிருஷ்ணகிரி. ஜன. 27. -
தமிழ்நாடு அரசு
மக்களின் நலனை மையமாகக் கொண்டு
தொடர்ந்து செயல்படுத்தி வரும்
நலத்திட்டங்களின் பயன்பாடு,
அதன் தாக்கம் மற்றும்
மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தி,
இந்த முயற்சியை பொதுமக்கள் மத்தியில்
விரிவாக பரவச் செய்வதற்காக,
செய்தி மக்கள் தொடர்புத்துறையின்
ஊடக மையம்
'உங்க கனவ சொல்லுங்க'
என்ற தலைப்பில்
ஊடக விழிப்புணர்வுப் போட்டிகளை
நடத்தவுள்ளது.
இதன் வாயிலாக இளைஞர்களும் பொதுமக்களும்
இத்திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
மக்கள் தேவைகளை உணர்ந்து செயல்படும்
தமிழ்நாடு அரசு,
மக்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில்
'உங்க கனவ சொல்லுங்க'
என்ற முன்னெடுப்பை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக,
தமிழ்நாட்டில் உள்ள
சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும்
நகர்ப்புற குடும்பங்களை,
தன்னார்வக் குழுக்கள் நேரில் சென்று சந்தித்து, அவர்களின் கருத்துகள் மற்றும்
2030 ஆம் ஆண்டை நோக்கிய கனவுகளை
சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கான களப்பணிகளை
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பயிற்சி பெற்ற
சுமார் 50,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கனவு அட்டை
பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும்
தகவல்கள் பிரத்யேக செயலியில்
பதிவேற்றம் செய்யப்பட்டு,
மக்களுக்கு 'கனவு அட்டை' வழங்கப்படும்;
அதன் வாயிலாக
www.uks.tn.gov.in
இணையதளத்தில் பொதுமக்கள்
தங்கள் கோரிக்கைகளின் நிலையை
அறிந்து கொள்ளலாம்.
இந்த முயற்சியை மக்களிடம் கொண்டு
செல்லும் வகையில்,
செய்தி மக்கள் தொடர்புத்துறையின்
ஊடக மையம்
சமூக ஊடக
விழிப்புணர்வுப் போட்டிகளை
நடத்தவுள்ளது.
போட்டிகளும் அதன் விதிமுறைகளும்
பின்வருமாறு:
இந்த போட்டிகள் இரண்டு வகையான பங்கேற்பு முறைகளில் நடத்தப்படும்.
1.பொதுமக்கள் பிரிவு
2. உள்ளடக்க உருவாக்குநர்கள் பிரிவு
(Content Creators)
1. பொதுமக்கள் எவ்வாறு பங்கேற்கலாம்?
பொதுமக்கள்,
இணைப்பு-I-ல் (Annexure-l)
குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களில்
ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து.
30 முதல் 60 விநாடிகள் வரையிலான
வீடியோவை உருவாக்கிச்
சமர்ப்பிக்க வேண்டும்.
வீடியோவிற்கான விதிமுறைகள்:
வடிவம்:
வீடியோக்கள் தெளிவான ஒரு கருப்பொருளை
(Concept-based) அல்லது
கதை வடிவிலான (Story-based)
உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டம் மற்றும்
'உங்க கனவ சொல்லுங்க'
முன்னெடுப்பின் மையக்கருத்து சிதையாமல்,
அதனுடன் வீடியோ தெளிவாக
ஒத்துப்போக வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
வீடியோக்களை கீழ்க்கண்ட ஏதேனும்
ஒரு வழியில் சமர்ப்பிக்கலாம்:
1. நேரடிப் பதிவேற்றம்:
கூகுள் படிவத்தில் (Google Form)
வீடியோ கோப்பை நேரடியாகப் பதிவேற்றம் செய்யலாம்.
2. கூகுள் டிரைவ் லிங்க்:
வீடியோவை உங்கள் கூகுள் டிரைவில் பதிவேற்றி, அதன் இணைப்பை (Link) அனுப்பலாம்.
(குறிப்பு: லிங்க் அனைவருக்கும் அணுகும் வகையில் 'Open Access' அனுமதியுடன் இருப்பதை உறுதி செய்யவும்).
வயது வரம்பு மற்றும்
மதிப்பீட்டு முறைகள்
பங்கேற்பாளர்கள் பின்வரும் வயது வரம்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவார்கள்
குழந்தைகள்: 10 வயதிற்கு உட்பட்டவர்கள்
பள்ளி மாணவர்கள்:
11 - 14 வயது மற்றும் 15 - 17 வயது
இளைஞர்கள்: 18 - 25 வயது.
பெரியவர்கள்:
26 - 40 வயது மற்றும் 41 - 60 வயது.
முதியவர்கள்: 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்
மதிப்பீட்டு விதிமுறைகள்:
1. ஒவ்வொரு பங்கேற்பாளரும்
அவர்கள் சார்ந்த வயதுப் பிரிவினருடன்
மட்டுமே ஒப்பிடப்பட்டு மதிப்பீடு
செய்யப்படுவார்கள்.
2. படைப்புகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் காலக்கெடுவை (Deadடine) முறையாகப்
பின்பற்றி இருக்க வேண்டும்.
3. வீடியோவின் மையக்கருத்து,
கதையின் தரம் மற்றும் சொல்லப்படும்
செய்தியின் தெளிவு ஆகியவற்றின்
அடிப்படையில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு.
மாண்புமிகு செய்தி மக்கள்
தொடர்புத் துறை அமைச்சர்
திரு. மு.பெ. சாமிநாதன்.
அவர்கள்
சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை
(Certificates of Recognition & Medals)
வழங்கிச் சிறப்பிப்பார்.
2. உள்ளடக்க உருவாக்குநர்கள்
(Content Creators)
உள்ளடக்க உருவாக்குநர்கள்,
"உங்க கனவ சொல்லுங்க"
முன்னெடுப்பின் நோக்கத்தை விளக்கும்
வகையில் பிரத்யேக வீடியோக்களை
உருவாக்கி
அனுப்ப வேண்டும்.
இந்த திட்டம் குறித்த விரிவான விளக்கம்
இணைப்பு-2-ல் (Annexure-2)
வழங்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யும் முறை:
வீடியோக்களைக் கீழ்க்கண்ட வழிகளில் சமர்ப்பிக்கலாம்:
கூகுள் படிவம்:
வீடியோ கோப்பினை
நேரடியாகப் பதிவேற்றலாம்.
கூகுள் டிரைவ்:
'Open Access' அனுமதியுடன் கூடிய
டிரைவ் லிங்க் மூலம்
சமர்ப்பிக்கலாம்.
தேர்வு மற்றும்
வெளியிடும் நடைமுறை:
1. மாவட்டத்திற்கு
10 உள்ளடக்க உருவாக்குநர்கள் வீதம்,
தேர்வு செய்யப்பட்டு.
அவர்களுக்கு அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவிக்கப்படும்.
2. தேர்வு செய்யப்பட்டவர்கள்.
ஊடக மையத்தின் வழிகாட்டுதலின்படி
அந்த வீடியோவைத் தங்களது
சமூக ஊடகக் கணக்குகளில்
(Instagram, Facebook. YouTube)
பதிவிட வேண்டும்.
3. வீடியோவைப் பதிவிட்ட பிறகு,
அதன்
நேரடி இணைப்பை
(Live Post Link)
ஊடக மையம் வழங்கும்
தனி கூகுள் படிவத்தில்
சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பீட்டு விதிமுறைகள்:
1. வீடியோ பதிவிடப்பட்ட பிறகு
அதன்
சென்றடைவு (Reach),
ஈடுபாடு (Engagement) மற்றும்
தாக்கம் (Impact)
ஆகியவை
ஆய்வு செய்யப்படும்.
2. இப்போட்டிக்காகத்
தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட
புதிய (Original) உள்ளடக்கங்கள்
மட்டுமே ஏற்கப்படும்.
3. வீடியோக்கள் கட்டாயமாக
உங்க கனவ சொல்லுங்க'
முன்னெடுப்பையும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தையும் முழுமையாகப்
பிரதிபலிக்க வேண்டும்.
4. சிறப்பாகச் செயல்படும்
உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு
"TNDIPR Media Hub-
உங்க கனவ சொல்லுங்க
தன்னார்வலர்கள்"
என்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Annexure-l
அரசின் மக்கள் நலத்திட்டங்கள்
A. குழந்தைகள் நலன்
1. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்.
2. பள்ளி /கல்லூரி மாணாக்கர்களுக்கான
கல்வி உதவித் தொகை
(SC/ST/MBC/DNC/BC)
3. இல்லம் தேடிக் கல்வி
4. அன்புக்கரங்கள் திட்டம்
5. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்.
B. மகளிருக்கான திட்டங்கள்
1. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
2. மகளிர் விடியல் பயணம்
3. புதுமைப் பெண்
4. தோழி விடுதி
5. மகளிர் சுய உதவிக் குழுக்கள்
6. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு
நிதியுதவித் திட்டம்
7. மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம்
8. இலவச தையல் இயந்திரம்
9. நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்
10. விதவைகள், ஆதரவற்றோர். கைவிடப்பட்டோர். திருமணமாகாதோர் ஓய்வூதியம்
C. இளைஞர் நலன்,
கல்வி, தொழிலாளர் நலன் மற்றும்
வேலைவாய்ப்புத் திட்டங்கள்
1. தமிழ்ப் புதல்வன்
2. நான் முதல்வன்
3. புதிய தொழில்முனைவோர் மற்றும்
தொழில் நிறுவனங்கள்
மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)
4. கலைஞர் கைவினைத் திட்டம் (KKT)
7. அண்ணல் அம்பேத்கர்
வணிக சாம்பியன்ஸ் திட்டம்
8. சுய தொழில் -
TAHDCO/TAMCO/TABCEDCO கடன்கள்
9. கூட்டுறவுச் சங்கம்/வங்கி கடன்
(சுய வேலைவாய்ப்புக் கடன், கால்நடை கடன்)
10. தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்
11. மாற்றுத்திறனாளிகளுக்கான
சுய வேலைவாய்ப்பு திட்டம்
12. தனியார் வேலைவாய்ப்பு முகாம்
13. முதல்வரின் திறமை தேடல் தேர்வு
14. முதல் தலைமுறை
பட்டதாரி மாணாக்கர்களுக்கு
கல்விக்கட்டணச் சலுகை
16. உயர்வுக்கு படி
17. ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி
18. கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம்
19. விளையாட்டு வீரர்களுக்கு,
வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு
20. தொழிலாளர்/உழவர்/
மற்ற நல வாரிய உறுப்பினர் பதிவு
மற்றும்
புதுப்பித்தல்
21. தொழிலாளர்/உழவர்/
மற்ற நிதியுதவி
மற்றும்
நலத் திட்டப் பலன்கள்
D. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து
1. நலம் காக்கும் ஸ்டாலின்
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டுத் திட்டம்
3. முதல்வர் மருந்தகம்.
4. மக்களைத் தேடி மருத்துவம்.
5. இன்னுயிர் காப்போம் -
நம்மைக் காக்கும் 48
E மாற்றுத் திறனாளிகள் நலன்
1. மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை
2. மாற்றுத் திறனாளிகளுக்கான
உதவி உபகரணங்கள்
3. மாற்றுத்திறனாளிகள் - ஓய்வூதியம்
4. கட்டணமில்லா மற்றும்
சலுகைக்கட்டணத்துடன்
பேருந்து பயணத்திட்டம்
5. அரசின் வேலைவாய்ப்பகத்தில்
பதிவு செய்துள்ள அனைத்து வகை
மாற்றுத் திறனாளிகளுக்கும்
வேலைவாய்ப்பற்றோர்
நிவாரணத் தொகை திட்டம்
F. முதியோர் நலன்
1. முதியோர் ஓய்வூதியத் தொகை
2. தாயுமானவர் திட்டம்
(முதியோர் வீடு தேடி
ரேஷன் பொருட்கள் வழங்குதல்)
3. அன்புச் சோலை
G. வீட்டு வசதித் திட்டங்கள்
1. வீட்டுமனைப் பட்டா
2. கலைஞரின் கனவு இல்லம்
3. நகர்ப்புற வாழ்விட வீடு வழங்கும் திட்டம்
4. ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம்
5. தாட்கோ வீட்டு வசதித் திட்டம்
6. மீனவர் குடியிருப்பு வீட்டு வசதித் திட்டம்
H. விவசாயிகள் மற்றும் மீனவர் நலன்:
1. விவசாய உபகரணங்கள்
2. இ-வாடகை
3. உழவர் பாதுகாப்புத் திட்டம்
4. கடல் மீனவர் குடும்பங்களுக்கு
மீன்பிடி தடைக்கால நிவாரணம்
5. மீனவர் / மீனவப் பெண் சேமிப்பு
மற்றும்
நிவாரணத் திட்டம்
1. குறைதீர்வு
1. மக்களுடன் முதல்வர் முகாம்கள்
2. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
Annexure-II
“உங்க கனவ சொல்லுங்க”
திட்டம் விளக்கம்
2 கோடி குடும்பங்கள்
2 கோடி கனவுகள் 2030.
உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு
மாண்புமிகு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்கள்
உறுதிமொழியை அளிக்கிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க
"உங்க கனவ சொல்லுங்க.."
முன்னெடுப்பு மூலம்,
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தமிழ்நாடு அரசு நேரடியாக அணுகி
அவர்களது கனவை கேட்டு வருகிறது.
ஒவ்வொரு குடும்பத்தின் கனவும்
பதிவு செய்யப்பட்டு,
ஒரே கண்காணிப்பு அமைப்பில்
தொகுக்கப்படும்.
வலுவான நடைமுறைகள் மற்றும்
செயல்படுத்தல் கட்டமைப்புகள் மூலம்.
2030க்குள் இந்த கனவுகள் நிறைவேறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில்
அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு
திட்டங்களில் பயனடைந்துள்ள
பயனாளிகளின் தரவுகள் மற்றும்
விவரங்களை உறுதிப்படுத்தவும்.
திட்டங்களின் தற்போதைய
செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும்.
மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும்
தேவைகளைக் கண்டறியவும்.
அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று
நேரடியாக அறிந்து கொள்ளும்
உங்க கனவ சொல்லுங்க"
என்ற திட்டத்தினை செயல்படுத்த
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
"உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தில்,
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி
கிராமப்புற மற்றும் நகர்ப்புற
பகுதிகளில் உள்ள
குடும்பங்களை சந்தித்து,
அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும்
கனவுகளை
50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி
கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி
முயற்சியாகும்.
இந்த களப்பணி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
மூலம் மேற்கொள்ளப்படும்.
இப்பணிக்காக
மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த
சுமார் 50,000 உறுப்பினர்கள்
தன்னார்வலர்களாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை
பதிவு செய்ய
தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை
(TNeGA) மூலம்
தனியாக கைபேசி செயலி
இதற்கென
உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் செயலாக்கம்
குறித்த விவரங்கள்
அனைத்து ஊரகம் மற்றும்
நகர்ப்புறப் பகுதிகளிலும்,
நாளிதழ்கள்,
சமூக ஊடகங்கள்
மற்றும்
உள்ளாட்சி அமைப்புகள்
மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு,
விழிப்புணர்வு பணிகளை
செய்தி மக்கள் தொடர்புத் துறை
ஒருங்கிணைக்கும்.
தன்னார்வலர்கள்,
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர்.
முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது
விண்ணப்ப படிவத்தினை
குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர்.
அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள
அரசு திட்டங்களின்
பெயர் பட்டியல் விவரங்களை
அவர்களிடம் தெரிவித்து,
படிவத்தினை பூர்த்தி செய்து
தரும்படி கோருவர்.
தன்னார்வலர்கள்,
இரண்டு நாட்களுக்குப் பிறகு
ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை
சரிபார்த்து கைபேசி செயலியில்
பதிவேற்றம் செய்வர்.
கைபேசி செயலியில்
பதிவேற்றியப் பின்னர்
அக்குடும்பத்திற்கு தனித்துவமான
அடையாள எண்ணுடன் கூடிய
கனவு அட்டையினை வழங்குவர்.
இந்த அட்டை மூலம்
www.uks.tn.gov.in
என்ற இணையதளத்தில்
தங்களது கனவு /கோரிக்கையின்
நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------.