கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் ஒன்றியத்தில்
ஒசூர் முதல் கனிமங்கலம், வெங்கடாபுரம் வழியாக பாகலூர் வரை புதிய பேருந்து
இயக்கம் தொடக்க விழா
ஒசூர் எம்எல்ஏ.
ஒய்.பிரகாஷ் பங்கேற்பு
ஓசூர். பிப்ரவரி. 8. –
ஓசூர் எம்எல்ஏ. ஒய்.பிரகாஷ்
ஓசூர் முதல் ஜீமங்கலம், கனிமங்கலம், வெங்கடாபுரம்,
வழிதடத்தில் பாகலூர் வரை
புதிய பேருந்து(எண் – 2C)
இயக்கத்தை ஓசூர் எம்எல்ஏ.
ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில்,
ஓசூர் முதல்
ஜீமங்கலம்,
கனிமங்கலம்,
வெங்கடாபுரம்,
வழியாக பாகலூர் வரை
புதிய பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.
கிராமமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில்
புதிய பேருந்து இயக்க
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, ஒசூர் முதல் ஜீமங்கலம், கனிமங்கலம், வெங்கடாபுரம் வழியாக பாகலூர் வரை புதிய பேருந்து(எண் 2C) இயக்கத்திற்கான விழா கனிமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும்,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான
ஒய்.பிரகாஷ்
தலைமை வகித்து,
புதிய பேருந்து இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்,
ஒன்றியச் செயலாளர்
கஜேந்திர மூர்த்தி,
ஒன்றிய நிர்வாகிகள்
நாகராஜ், பாபு, வீரபத்திரப்பா, ராமு, முனிராஜ், ரமேஷ், கோபால், சேகர், லோகேஷ்ரெட்டி, தியாகராஜ் , சிவசங்கர், முனிராஜ், ரவி,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
முனிராஜ்,
கனிமங்கலம் கிளை செயலாளர்
சீனப்பா, பசீர், சந்திரப்பா, பாலமுரளி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------.