8-ம் ஆண்டு சமுதாய வளைகாப்பு
திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
தளி சட்டப்பேரவை தொகுதியில்
பொது சுகாதாரத்துறையின் சார்பில்
கெலமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின்
எட்டாவது ஆண்டு
சமுதாய வளைகாப்பு திருவிழா.
1000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி
தாய்மார்களுக்கு சீர்வரிசை
தளி எம்எல்ஏ
திரு. T. ராமச்சந்திரன்
பங்கேற்பு
தேன்கனிக்கோட்டை. ஜன. 12. -
கெலமங்கலம் வட்டார
ஆரம்ப சுகாதார நிலையத்தின்
8-ம் ஆண்டு சமுதாய வளைகாப்பு
திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டையில்
பொது சுகாதார துறையின் சார்பில்
கெலமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின்
8-ம் ஆண்டு சமுதாய வளைகாப்பு
திருவிழா நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை தேர் பேட்டையில் உள்ள சப்தகிரி திருமண மண்டபத்தில்
நடந்த இந்த விழாவுக்கு
கெலமங்கலம் வட்டார
மருத்துவ அலுவலர்
திரு. ராஜேஷ் குமார்
தலைமை வகித்தார்.
கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய
கண்காணிப்பாளர்
திரு. ராஜா
வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக
தளி எம்எல்ஏ
திரு. T. ராமச்சந்திரன்.
அவர்கள்
கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை
துவக்கி வைத்தார்.
தொடர்ந்து
கர்ப்பிணி பெண்களுக்கு
புடவை,
மஞ்சள், குங்குமம்,
வளையல்,
பழங்கள்,
உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள்
மற்றும்
கர்ப்பிணி தாய்மார்களின்
லேமினேஷன் போட்டோ
ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில்
தளி எம்எல்ஏ
திரு. T. ராமச்சந்திரன்.
சிறப்புரையாற்றும் போது கூறியதாவது...
தளி சட்டமன்றத் தொகுதி
தேன்கனிக்கோட்டையில் சுமார் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு
இன்று சமுதாய வளைகாப்பு
திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்
மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்
மற்றும்
மருத்துவத்துறை அனைத்து பிரிவுகளும்
சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளனர்.
அதை நான் பாராட்டுகிறேன்.
பெண் சிசுக்கொலையை
தடுக்க வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள்
கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை
நன்கு ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு
மருத்துவ ஆலோசனைகளை பெற்று
நலமுடன் இருக்க வேண்டும்.
பிறக்கப் போகும் குழந்தை
ஆணா, பெண்ணா,
என்று பார்க்காமல் குழந்தைகளை
நன்முறையில் ஆரோக்கியமான
உணவு வழங்கி
படிக்க வைக்க வேண்டும்.
பெண் சிசுக்கொலையை
தடுக்க வேண்டும்.
குழந்தை திருமணங்களை
தடுக்க வேண்டும்.
குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
குழந்தை திருமணங்களை
கண்டாலோ அல்லது அறிந்தாலோ
அருகில் உள்ள சமூக நல அலுவலரையோ
அல்லது காவல்துறையை
தொடர்பு கொண்டு தகவல்
தெரிவிக்க வேண்டும்.
சமூக மத நல்லிணக்கத்திற்கு
எடுத்துக்காட்டு
மதம் ஜாதி பார்க்காமல் அனைவரையும்
ஒரே இடத்தில் அமர வைத்து
சமுதாய வளைகாப்பு நடத்துவது
ஒரு சமூக மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழக முதல்வரால் தற்போது ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை
அனைத்தும் இலவசமாக
வழங்கப்படுகிறது.
அனைவரும்
கல்வி கற்க வேண்டும்
நான் செல்லும் இடமெல்லாம்
அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசி வருகிறேன்.
குழந்தைகளை கூலி வேலைக்கு அல்லது
செங்கல் சூளை வேலைக்கு
அனுப்பாமல் அனைவரும்
கல்வி கற்க வேண்டும் என்று
விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.
இவ்வாறு தளி எம்எல்ஏ பேசினார்.
இந்த விழாவில்
சிபிஐ மாநில குழு உறுப்பினர்
திரு. லகுமய்யா.
தேன்கனிக்கோட்டை
போலீஸ் இன்ஸ்பெக்டர்
திரு. கணேஷ்குமார்,
கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி
மருத்துவமனை பேறு கால
மருத்துவர்
திருமதி. வாசுகி,
சமூக ஆர்வலர்
மருத்துவர்
திரு. சுப்பிரமணியம்,
மற்றும் கர்ப்பிணி பெண்களின் உற்றார் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு
இந்த விழாவினை சிறப்பித்தனர்.
அறுசுவை உணவு
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவசமாக போக்குவரத்து சேவையும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
---------------------------------.