குழந்தைகள் தினவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி 3-வது வார்டு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
குழந்தைகள் தின விழா கோலாகலம்
மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழ் பரிசுகள் வழங்கி பாராட்டு
ஓசூர் மாமன்ற உறுப்பினர்
திரு.ரஜினிகாந்த்
பங்கேற்பு
ஓசூர். நவ. 14. –
குழந்தைகள் தினவிழா
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு பேடரப்பள்ளியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேடரப்பள்ளி மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பேடரப்பள்ளியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 885 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் சிறந்த பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் சிறந்த பள்ளியாக பேடரப்பள்ளி அரசுப்பள்ளி விளங்கி வருகிறது.
இதனால் மாணவர்கள் சேர்க்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இடப்பற்றாக்குறை காரணமாக
பேடரப்பள்ளியில் மூன்று இடங்களில்
இந்த அரசுப்பள்ளி இயங்கி வருகிறது.
குழந்தைகள் தினவிழா
பண்டிட் ஜவஹர்லால் நேரு
பிறந்த நாளையொட்டி நவ.14 -ம் தேதியன்று பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளியில்
குழந்தைகள் தின விழா
மிகவும் பிரம்மாண்டமாக
கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு
தலைமை ஆசிரியர்
பொன்நாகேஷ்
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
ஓசூர் மாமன்ற உறுப்பினர்
திரு. ரஜினிகாந்த்,
பங்கேற்று குத்து விளக்கேற்றி
விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து
தேசியக்கொடி
ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்கள்
பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து
திரு. லக்கப்பா,
திரு. ரமேஷ்,
திரு. செல்லப்பா,
திரு. சுந்தரமூர்த்தி ,
திரு. ரவி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மை குழு
திருமதி. விஜி ,
திரு. விஜய்,
திருமதி. சுகன்யா,
திரு. நாராயண ரெட்டி,
திரு. சரவணன்,
திரு. ரவி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் தினவிழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த
சிறப்பு அழைப்பாளர்களுக்கு
தலைமையாசிரியர்
பொன் நாகேஷ்
பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இனிப்பு
குழந்தைகள் தினவிழாவில் பங்கேற்ற
மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும்
ஓசூர் மாமன்ற உறுப்பினர்
திரு. ரஜினிகாந்த்
அவர்கள்
லட்டு வழங்கினார்கள்.
குழந்தைகள் தினவிழாவில்
மாணவர்களுக்கு
நடன போட்டி
விளையாட்டுப் போட்டி
பேச்சுப்போட்டி
ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
பரிசு - சான்றிதழ்
விளையாட்டுப் போட்டிகளில்
வெற்றி பெற்ற
சுமார் 100 மாணவர்களுக்கும்
கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட
சுமார் 80 மாணவர்களுக்கும்
சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
அதேபோல பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட
10 மாணவர்களுக்கும்
பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அறுசுவை உணவு
சூர்யா பிளாஸ்டிக் நிறுவனர்
திரு. ஞானவேல்
அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
குழந்தைகள் தினவிழாவில்...
6-வது, 7 -வது, மற்றும் 8-வது வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள்
சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு
அனைத்து மாணவர்களும் புதுப்புது வண்ணமயமான ஆடை அணிந்து
உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்து,
ஒரு பண்டிகை போல சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில்
பெற்றோர்கள்,
முன்னாள் மாணவர்கள்,
ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி குழுவினர்
கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.