கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் உலக புகைப்பட தினவிழாவில்
உடல் உறுப்புகளை தானம் செய்த
34 புகைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு
உதவி காவல் கண்காணிப்பாளர்
அடையாள அட்டை வழங்கி
வாழ்த்து
ஒசூர் ஆகஸ்ட் 20
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
போட்டோ அண்ட்
வீடியோகிராபர் நலச்சங்கம்
உடல் உறுப்புகள் தானம்
ஒசூரில் உலக புகைப்பட தினத்தையொட்டி புகைப்பட கலைஞர்கள் 34 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்தனர்.
ஒசூர் மாநகராட்சி, ரயில்நிலைய சாலையில்
உள்ள மீராமஹால் திருமண மண்டபத்தில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட போட்டோ அண்ட் வீடியோகிராபர் நலச்சங்கம் சார்பில்
உலக புகைப்பட தினவிழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு
மாவட்டத் தலைவர்
திரு. பிரபாகரன்
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக
உதவி காவல் கண்காணிப்பாளர்
திரு. அக்ஷய் அனில் வாக்ரே,
மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்கள்
டாகடர்.சண்முகவேல்,
டாக்டர்.பாரி,
டாக்டர். அம்பிகாபாரி
ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்
இந்த விழாவில்
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நலச்சங்கம் சார்பில்
கவுரவ தலைவர் கார்முகில்,
தலைவர் பிரபாகரன்,
செயலாளர் நாராயணன்,
பொருளாளர் மாதேஷ்,
உள்ளிட்ட 34 பேர் முதற்கட்டமாக தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.
34 பேருக்கும் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து
ஆதரவற்ற அன்பு இல்லத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் 13 மூட்டை அரிசி மற்றும் ரொக்கப் பணம் ரூ.5000, மளிகைப் பொருட்கள் ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த விழாவில் 200 க்கும் அதிகமான புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.