ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர் - 1. இதழ்கள் - 295
பெற்றோர் - சிறுவர்களுக்கு
வாகனங்களை ஓட்ட
வழங்கக் கூடாது -
ஓசூர் காவல்துறை
உதவி கண்காணிப்பாளர்
எச்சரிக்கை
News editor - JOTHI RAVISUGUMAR,M.A.
வாகனங்களை ஓட்ட
வழங்கக் கூடாது -
ஓசூர் காவல்துறை
உதவி கண்காணிப்பாளர்
எச்சரிக்கை
News editor - JOTHI RAVISUGUMAR,M.A.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பெற்றோர்...
சிறுவர்களுக்கு
இருசக்கர வாகனம்,
கார்,
ஆகிய வாகனங்களை
வழங்கக் கூடாது -
ஓசூர் காவல்துறை
உதவி கண்காணிப்பாளர்
வேண்டுகோள் மற்றும்
எச்சரிக்கை.
ஒசூர். ஜூலை. 19. -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்
கடந்த சில தினங்களுக்கு முன்பு
14 வயதுள்ள மூன்று சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று நிலை தடுமாறி
லாரியின் பின்னால் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்களுக்கும் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கும் வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக,
ஓசூர் காவல்துறை
உதவி கண்காணிப்பாளர்
அக்ஷய் அணில் வக்காரே
அவர்கள்
செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது -
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு
மூன்று சிறுவர்கள் எதிர்பாராத விதமாக
விபத்தில் சிக்கி உயிரிழந்தது நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
இதன் வாயிலாக பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு
காவல்துறை சார்பில் விடுக்கப்படும் வேண்டுகோள் என்னவென்றால்,
குறிப்பாக
கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் இருசக்கர வாகனங்களை கொண்டு வருவது குறித்து கண்காணிக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் பெற தகுதியுடைய வயது எட்டாத சிறுவர்களுக்கு பெற்றோர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்றவற்றை வழங்கக் கூடாது.
இதனை போலீசார் கண்காணித்து வருவதுடன் அவர்கள் விபத்து ஏற்படுத்தி விட்டால் பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு மூன்று வருட சிறை தண்டனையும் வழங்கப்படும்.
எனவே பெற்றோர்கள் இது தொடர்பாக சிந்தித்து
இது போன்ற ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களுக்கு, சிறார்களுக்கு துணை போகாமல் இருப்பது என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.
விழிப்புணர்வு
எனவே ஊடகங்கள் வாயிலாக
பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விழிப்புணர்வை காவல்துறை வாயிலாக
ஏற்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
சிறுவர்களுக்கு இது பற்றிய ஆபத்து அவர்களுக்கு தெரியாது.
150 சி.சி. அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பது போலவே,
200, 250சி.சி. வாகனங்களும் சிறார்கள் ஓட்டுகின்றனர்.
அதிவேகமாக வாகனங்களை பொறுப்பற்ற முறையில் அவர்கள் ஓட்டுகின்றனர்.
எனவே பெற்றோர் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இல்லையென்றால் காவல்துறை உங்கள் மீது வழக்கு பதிவு செய்யும்.
எச்சரிக்கை
இதன் வாயிலாக ஓசூர் மக்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிப்பது என்னவென்றால்,
எந்தவித சமரசமும் இன்றி இந்த விவகாரத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை இனி மேற்கொள்ளும்.
மேலும் இது போன்ற விதிமீறல்களை ஈடுபடுபவர்களுக்கு தண்டனையோ அபராதமோ மட்டுமில்லாது,
அந்த சிறுவனும் அல்லது சிறுமியோ அவர்கள் 25 வயது நிறைவடையும் வரை ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது.
இதுபோன்ற விபத்துக்களை ஏற்படுத்தி சிறுவர்கள் உயிரிழப்பதால் பெற்றோர்களுக்கு ஏற்படும் வலி சொல்ல இயலாது.
எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
தலைக்கவசம் கட்டாயம்
அதேபோல அனைவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு தொடர்ந்து மூன்று முறை
அபராதம் விதிக்கும் நிலை ஏற்பட்டால்
வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
என்று அவர் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------.