பொங்கல் பரிசு தொகுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் - தளியில்
ரூ.3000 ரொக்கம்
1கிலோ பச்சரிசி,
1கிலோ சர்க்கரை,
1முழுக்கரும்பு,
விலையில்லா வேட்டி, சேலை,
உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு
தளி எம்.எல்.ஏ.
திரு. டி.ராமச்சந்திரன்
அவர்கள் வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை. ஜன. 9. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் மற்றும் தேன்கனிக்கோட்டை,
தளி ஆகிய பகுதிகளில் உள்ள
கெலமங்கலம் கூட்டுறவு விற்பனை சங்க
நியாயவிலை கடைகளில்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட
பொங்கல் பரிசுத்தொகை மற்றும்
பொங்கல் தொகுப்புகள் வழங்கும்
நிகழ்வு ஜனவரி 8-ம் தேதியன்று நடைபெற்றது.
கெலமங்கலம், தளி
நியாய விலைக்கடைகளில்
ரூ.3000 ரொக்கம்
1கிலோ பச்சரிசி,
1கிலோ சர்க்கரை,
1முழுக்கரும்பு,
விலையில்லா வேட்டி, சேலை,
உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகளை
குடும்ப அட்டைதாரர்களுக்கு
வழங்கும் நிகழ்வில்
தளி எம்.எல்.ஏ.
திரு. டி.ராமச்சந்திரன்
அவர்கள் பங்கேற்று
பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்
திரு. ஜெயராமன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
நகர செயலாளர்
திரு. மதுக்குமார்.
திமுக நகர செயலாளர்
திரு. தஸ்தகீர்,
நகர அவைத் தலைவர்
திரு. கருணாநிதி
மற்றும்
கூட்டுறவுத் துறை அதிகாரிகள்
உடன் இருந்தனர்.