ஓசூரில் ஆந்திரா சமிதி
சார்பில்
சத்குரு தியாகராஜர் சுவாமி
இசையஞ்சலி
பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன்
ஸ்ரீ தியாகராஜர் சுவாமி
178-வது ஆண்டு
ஆராதனை விழா
ஓசூர். ஜனவரி. 18. –
ஓசூரில்
ஆந்திரா சமிதி சார்பில்
சத்குரு தியாகராஜர்
சுவாமிகளின்
178-ம் ஆண்டு ஆராதனை
விழாவில் தியாகராஜர் கீர்த்தனைகள்,
பஞ்சரத்ன கீர்த்தனைகள்
பாடி இசையஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி
துணை மேயர்
ஆனந்தய்யா
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
காமராஜ் காலனியில்
உள்ள ஆந்திரா சமிதி
அரங்கில் தியாகராஜர்
சுவாமிகளின்
178-வது ஆண்டு
ஆராதனை விழா
ஜனவரி 18-ம் தேதி நடைபெற்றது.
இந்த ஆராதனை
விழாவை
ஓசூர் மாநகராட்சி
துணை மேயர்
ஆனந்தய்யா
தொடங்கி வைத்தார்.
இந்த இசை நிகழ்வில்
ஆந்திரா சம்ஸ்கிருத்திகா சமிதி
சங்கீத மாஸ்டர்
வித்வான் தேவராஜ்
மற்றும்
குழுவினர் பங்கேற்று,
தியாகராஜர் சுவாமி
கீர்த்தனைகள்
பஞ்சரத்ன கீர்த்தனைகள்
பாடியும் இசைத்தும்,
சத்குரு தியாகராஜர்
சுவாமிக்கு
இசை அஞ்சலி
செலுத்தினார்கள்.
இந்த தியாகராஜர்
கீர்த்தனைகள் மற்றும்
பஞ்சரத்ன கீர்த்தனையில்
நாதஸ்வர வித்வான்
டி.எம்.ஜெயராம்.
மிருதங்கம் வித்வான்
வி.ஜெகதீஸ்.
நாதஸ்வரம் வித்வான்
நவீன்குமார்.
மிருதங்கம் வித்வான்
யஸ்வந்த்.
உள்ளிட்ட
வாத்தியக்குழுவினர்
பங்கேற்றனர்.
இந்த இசை நிகழ்வில்
மாநகராட்சி துணை மேயர்
ஆனந்தய்யா,
ஆந்திரா சமிதி நிர்வாகிகள்
மற்றும்,
ஓசூர் அதைச்சுற்றியுள்ள
பகுதிகளில் இருந்து
100-க்கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டனர்.