"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டையில்
"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
1362 நபர்களுக்கு பதிவு செய்து,
மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு.டி.ராமச்சந்திரன்,
ஆகியோர் நேரில் ஆய்வு
ஓசூர். நவ. 29. –
"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
1362 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை
தேன்கனிக்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி வளாகத்தில் நவ. 29-ம் தேதியன்று நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாமில்
1362 நபர்கள் பதிவு செய்து,
மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
இந்த முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு.டி.ராமச்சந்திரன்
ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் ஆணைக்கிணங்க,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களில்
தலா 3 முகாம்கள் என 10 வட்டாரங்களில்
30 மருத்துவ முகாம்களும்,
மாநகராட்சியில் 3 முகாம் என
மொத்தம் 33 மருத்துவ முகாம்கள்
நடைபெற உள்ளது.
நாளது வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
ஓசூர் மாநகராட்சி,
பாகலூர்,
தளி,
கெலமங்கலம்,
ஆலப்பட்டி,
சூளகிரி,
வேப்பனப்பள்ளி,
பர்கூர்,
மத்தூர்,
சிங்காரப்பேட்டை,
ஊத்தங்கரை,
சாமல்பட்டி,
காவேரிப்பட்டிணம்,
வேலம்பட்டி
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி
ஆகிய 16 பகுதிகளில்
"நலம் காக்கும் ஸ்டாலின்"
மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
17 - வது முகாம் -
1362 நபர்களுக்கு சிகிச்சை
தொடர்ந்து, இன்று (29.11.2025),
தேன்கனிக்கோட்டை செயின்ட் ஜோசப்
மெட்ரிக் பள்ளி வளாகத்தில்,
17 வது "நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 1,362 நபர்கள் பதிவு செய்து
மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
17 வகையான
சிறப்பு மருத்துவர்கள்
இம்மருத்துவ முகாமில் பொதுமக்கள்
பயன்பெறும் வகையில்,
சிறப்பு பொது மருத்துவம்,
பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனை,
எலும்பியல் மருத்துவம்,
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்,
குழந்தை மருத்துவம்,
இருதய மருத்துவம்,
நரம்பியல் மருத்துவம்,
தோல் மருத்துவம்,
பல் மருத்துவம்,
கண் மருத்துவம்,
காது மூக்கு தொண்டை மருத்துவம்,
மன நல மருத்துவம் மற்றும்
இரத்த பரிசோதனை மற்றும்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஸ்கேன் பரிசோதனை,
x-Ray, ECG, ECHO, Ultra Sound மற்றும்
கண் பரிசோதனை,
தொற்றா நோய்,
உயர் இரத்த அழுத்தம்,
சிறுநீரக பரிசோதனை,
சித்த மருத்துவம்
உட்பட 17 வகையான சிறப்பு மருத்துவர்கள்
மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ
காப்பீடு திட்டம்
மேலும், இம்மருத்துவ முகாமில்
பயனாளிகளுக்கு தேவையான
மருந்து,
மாத்திரைகள்
வழங்கப்பட்டன.
மேலும் உயர் சிகிச்சை தேவைப்படுவோர்
அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை மற்றும்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ
காப்பீடு திட்டத்தின்
கீழ் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
தளி சட்டமன்ற உறுப்பினர்
ஆகியோர்
56 மாற்றுத்திறனாளிகளுக்கு
தேசிய அடையாள அட்டைகள் மற்றும்
51 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை
வழங்கினார்கள்.
டாக்டர். மோரிஸ்
சேவைக்கு பாராட்டு
மேலும் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற இரண்டு
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கெலமங்கலம் வட்டாரத்தில்
142 கர்ப்பிணி தாய்மார்களுக்கு
கருவில் உள்ள குழந்தையின் குறைபாடு கண்டறியும் ஸ்கேன் (Anomaly scan) குளோபல் தனியார் ஸ்கேன் சேவையாக செய்துவரும் மரு.மோரிஸ் அவர்களின் தங்கைக்கு இன்று திருமணம் இருந்தும் இம் முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததையடுத்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
தளி சட்டமன்ற உறுப்பினர்
ஆகியோர்
மருத்துவர் மோரிஸ்
அவர்களின் சேவையை
பாராட்டி பொன்னாடை அணிவித்து
புத்தகம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
முன்னதாக
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்
அவர்கள், தேன்கனிக்கோட்டையில்
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை பார்வையிட்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட சுகாதார அலுவலர்
மரு.ரமேஷ் குமார்,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
திரு.முருகேசன்,
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர்
திரு. டி.ஆர்.சீனிவாசன்,
வட்டார மருத்துவ அலுவலர்
மரு.ராஜேஷ் குமார்,
வட்டாட்சியர்
செல்வி. கங்கை
மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள்,
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
-------------------------------------.