மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
யூபிலி திருச்சிலுவை
திருப்பயணம் தொடக்கம்
ஓசூர். பிப். 23. –
யூபிலி திருச்சிலுவை திருப்பயணம்
மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் யூபிலி – 2025 - திருச்சிலுவை
திருப்பயண தொடக்க விழா நடைபெற்றது.
பாரம்பரிய ஆலயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு
உட்பட்ட மத்திகிரியில் குதிரைப்பாளையத்தில்,
1924-ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான
பாரம்பரிய தூய ஆரோக்கிய
அன்னை ஆலயம்
மற்றும்
மத்திகிரி நேதாஜி நகரில்
25 ஆண்டுகளுக்கு முன்பு
கட்டப்பட்டுள்ள புதிய ஆலயம்
ஆகிய இரு ஆலயங்கள்
அமைந்துள்ளது.
இதில் புதிய ஆலயத்தில் பிப்ரவரி 23-ம் தேதி அன்று யூபிலி திருச்சிலுவை திருப்பயண தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
யூபிலி - 2025
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
முனைவர். லாரன்ஸ் பயஸ்
தருமபுரி மறைமாவட்ட அளவில்
2025 யூபிலி ஆண்டு தொடக்க விழா, டிசம்பர் மாதம் 29-ம் தேதி கிருஷ்ணகிரி,
புனித பாத்திமா அன்னைத் திருத்தலத்தில்
மறைமாவட்ட ஆயரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஓசூர் மறைவட்ட அளவில்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,
ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில்
அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில்
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
முனைவர். லாரன்ஸ் பயஸ்
தலைமை வகித்து, ஓசூர் மறைவட்ட அளவிலான
யூபிலி திருச்சிலூவை திருப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
7 ஆலயங்கள்
ஓசூர் மறை வட்டத்தில் உள்ள
மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் உட்பட 7 ஆலயங்களுக்கு
மந்தரிக்கப்பட்ட யூபிலி திருச்சிலுவைகளை ஆயர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, மத்திகிரி பாரம்பரிய ஆலயத்தில்
யூபிலி திருச்சிலுவை
வைக்கப்பட்டு தினமும்
சிறப்பு திருப்பலி
நடைபெற்று வருகிறது.
பெரிய திருச்சிலுவை
தருமபுரி மறைமாவட்ட
ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் வழங்கிய யூபிலி ஆண்டின் பெரிய சிலுவையின் தேர் பவனி
மத்திகிரி புதிய ஆலயத்தில்
பிப்ரவரி 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த யூபிலி திருச்சிலுவை
பவனியை
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
தொடங்கி வைத்தார்.
திருச்சிலூவை பவனியில்
திருச்சிலூவையில் இறை இயேசு, ஆலயத்தைச் சுற்றிலும் பவனியாக வந்து இறைமக்களுக்கு அருளாசி வழங்கினார்.
இந்த பவனியில் பங்கு தந்தை கிறிஸ்டோபர், மூத்த அருட்தந்தை ராயப்பர், அருட்சகோதரிகள், பங்கு குழுவினர், மற்றும் இறைமக்கள்
ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில்
வாசக முன்னுரைகள்,
வாசகங்கள்,
மன்றாட்டுகள்,
படிக்கப்பட்டு,
யூபிலி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சிறப்பு மறையுரை
இந்த திருப்பலியில் பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமை வகித்து
யூபிலி ஆண்டின் சிறப்பு திருப்பலி பூஜை
செய்து, சிறப்பு மறையுரை நிகழ்த்தினார்.
இதில் அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
யூபிலி ஆண்டின்
இலச்சினையின் மையப்பொருள் –
யூபிலி ஆண்டிற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள
இலச்சினை, கவர்ச்சியும், நேர்த்தியும் நிறைந்த நான்கு மனித உருவங்களைக் கொண்டுள்ளது. அவை முறையே
சிவப்பு,
செம்மஞ்சள்(ஆரஞ்சு),
பச்சை,
நீலம்,
ஆகிய நிறங்களில் உள்ளன.
வானவில்லின் நிறங்களை நினைவூட்டும் அந்நிறங்களின் தேர்வு தற்செயலானதன்று அவை, வழிபாட்டு ஆண்டின் வெவ்வேறு காலங்களுக்குரியவைபோன்று பொருள் பொதிந்தவை.
சிவப்பு நிறம்
மானிட மீட்பிற்காகத் தம்மையே சிலுவையில் பலியாக ஈந்த கிறிஸ்துவின் உன்னத தியாகத்தையும் அவரது அணை கடந்த அன்பையும் அடையாளப்படுத்தும் விதமாக
அளவில்லா அன்பு,
பற்றார்வம்,
தற்கையளிப்பு,
ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும் கிறிஸ்தவர்களுக்கு ஆன்ம உயிரூட்டம் தரும் தூய ஆவியாரின்
கனலையும்,
ஆற்றலையும்,
குறித்து நிற்கிறது.
செம்மஞ்சள் நிறம்
நம்பிக்கையின் பாதையை ஒளிர்விக்கும் இறை ஒளியென மகிழ்ச்சி, உயிரூட்டம் மற்றும் உற்சாகத்தைக் குறிக்கிறது.
பச்சை நிறம்
எதிர் நோக்கு வளர்ச்சி மற்றும் புதுப்பிறப்பின் அடையாளமென உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட நிறமாக பச்சை திகழ்கிறது.
நீல நிறம்
நம்பிக்கை, அமைதி மற்றும் அலைபாயா ஆழ்மனப் பேரமைதியை அடையாளப்படுத்தும் நீல நிறம், வான் விரிவையும், ஆன்மிகத்தையும் விளித்து நம்மை ஆழ்நிலைத் தியான வாழ்விற்கும், இறைவேண்டல் வாழ்விற்கும் அழைக்கிறது.
படகுப்பாய்
படகுப்பாய் வடிவிலான மனித உருவங்கள் நான்கும் உலகின் நான்கு திசைகளில் பரவி வாழும், ஒற்றுமை வேற்றுமைகளை உள்ளடக்கிய மாந்தர் அனைவரையும் அடையாளப்படுத்துகின்றன.
அவர்கள் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு
முன்செல்கிறார்கள்.
உலக மாந்தர் அனைவரும்
கூட்டொருமையிலும்,
சகோதரத்துவத்திலும்,
ஒன்றிணைந்து பயணிப்பது அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.
கூட்டுத்தோழமை
அவர்கள் வழிநடத்திச் செல்லும் சிவப்பு உருவம், திருச்சிலுவையைப் பற்றி நிற்க, அவர்கள் ஒருவரையொருவர் தழுவி நிற்கும் தோற்றம், மக்கள் சமூகங்களுக்கு இடையிலான கூட்டுத் தோழமையைக் குறிக்கிறது.
நங்கூரம் - அரவணைப்பு
கருநிறத்தில் வளைந்துள்ள அச்சிலுவை, அடிப்பகுதியில் நங்கூரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிலுவை நெகிழ்வற்று விறைப்பாக இல்லை. மாறாக, மனித இனம் முழுவதையும் அரவணைக்க வளைந்து சாய்ந்துள்ளது.
படகுப்பாய் - திருச்சிலுவை
நங்கூரமாக் கீழிறங்கும் படகுப்பாய் வடிவிலான திருச்சிலுவை, அசைந்தாடும் அலைகள் மீது நிற்கிறது. இது எதிர்நோக்கின் உலகளாவிய அடையாளம்.
நங்கூரம் - பாதுகாப்பு
கப்பலில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள நங்கூரம், புயல்கள் எழும்பித் தாக்கும் வேளைகளில், கப்பலை இலாவகமாக இயக்கிப் பாதுகாப்பாக நிலை நிறுத்தப் பயன்படுகிறது.
யூபிலி ஆண்டின் இலச்சினையில் பயன்படுத்தப்படும் நங்கூரம் உருவகம், பொருள் பொதிந்தது.
கப்பல் பயணத்தில் மிக இக்கட்டாண தருணங்களில் நாம் நங்கூரத்தையே நம்பி இருக்கிறோம்.
பாதுகாப்பு தரும் சிலுவை
அது நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது.
நம் மீட்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இறைவனின் அணைகடந்த அன்பின் உச்சத்தை வெளிப்படுத்துகிற கிறிஸ்துவின் திருச்சிலுவையைத் தவிர வேறு
நங்கூரம் ஏது?.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இன்னல்களையும் நினைவூட்டுகிறது கடல், வாழ்வில் வந்து நம்மை நெருக்கும் தனிமனித மற்றும் உலகச் சிக்கல்களும், நிகழ்வுகளும், நம்மிடம் எதிர் நோக்கைக் கோருகின்றன.
நம் எதிர்நோக்கான
இயேசு கிறிஸ்துவின் திருச்சிலுவையை நாம் ஒரு போதும் கைவிட முடியாது.
அது எப்போதும், குறிப்பாக மிக இக்கட்டான தருணங்களில் நமக்கு மிகவும் தேவைப்படுகிறது.
எனவே நாம் எப்போதும் திருச்சிலுவையை விடாமல் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
---------------------------------------------------.