இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த
பிதாமகர்கள், அமைப்புகள் பல.
அவர்களின் வீரம் செறிந்த போராட்டங்களையும்,
தியாகங்களையும் சொல்லிக் கொண்ட போகலாம். ஆனால்,
முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்
தேசப் பிதா காந்திதான்.
ஆகஸ்ட் 15 - 1947 –
இந்தியாவின் சுதந்திர தினம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால் அந்தத் தேதியை ஏன் தேர்வு செய்தார்கள்?
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட் . 15. -
இந்தியாவின் 79 -வது சுதந்திர தினம்
தேயிலை, பருத்தி, பட்டு ஆகியவற்றை வியாபாரம் செய்வதற்காக 1600ல் உள்ளே புகுந்த நிறுவனம்தான் கிழக்கிந்திய கம்பெனி.
உள்ளே வந்த அவர்கள் இந்தியாவைக் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து வசம் போனது சிதறிக் கிடந்த இந்தியா.
அதன் பின்னர் நீண்ட நெடிய போராட்டங்கள், பல்லாயிரம் உயிர்களைப் பறி கொடுத்து இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது. இந்தியாவின் சுதந்திர தின தேதியை முடிவு செய்தது இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், இந்தியாவின் முதல் கவனர் ஜெனரலுமான லார்ட் மெளன்ட் பேட்டன்தான்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிதான் 2ம் உலகப் போரின் முடிவாக, ஜப்பான், ஐக்கிய படையிடம் சரணடைந்தது.
இதை நினைவில் கொண்டுதான்
இதே ஆகஸ்ட் 15ம் தேதி
மெளன்ட் பேட்டன்
இந்தியாவின் சுதந்திர தினமாக தேர்ந்தெடுத்தார்.
தேசப்பிதா காந்தி
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பிதாமகர்கள், அமைப்புகள் பல.
அவர்களின் வீரம் செறிந்த போராட்டங்களையும், தியாகங்களையும் சொல்லிக் கொண்ட போகலாம். ஆனால் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர் தேசப் பிதா காந்திதான்.
அவருடைய காங்கிரஸ் கட்சியின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு தேசம் எப்போதுமே நன்றியுடையதாக இருக்கிறது.
ஆனால் இந்த காங்கிரஸ் கட்சியை சுதந்திரத்திற்குப் பின்னர் கலைத்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் மகாத்மா காந்தி!.
ஆகஸ்ட் 15 என்பது இந்தியா முழுவதும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் நாள். இன்று நமது சுதந்திர தினமாக கருதுகிறோம்.
இந்த நாள் சாதி, மதம், மாகாணம் மற்றும் கலாச்சாரத்தை விட பெரியது.
இன்று, நமது 79 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் நிலையில்,
இந்த நாளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வது கட்டாயமாகும்.
இன்றைய மிக முக்கியமான சில உண்மைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவோம்?.
ஜப்பானின் நட்பு நாடுகளுக்கு சரணடைந்த இரண்டாம் ஆண்டு விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி வருகிறது என்று அப்போதைய இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் மவுண்டன் லார்ட் காம்ப்பெல் ஜான்சன் கூறுகிறார்.
இந்த காரணத்திற்காக இந்த நாளில் இந்தியாவை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
- ஆகஸ்ட் 15 இந்தியா தவிர வேறு மூன்று நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.
ஆகஸ்ட் 15, 1945 அன்று தென் கொரியா ஜப்பானிலிருந்து பிரிந்தது.
ஆகஸ்ட் 15, 1971 இல் பிரிட்டனில் இருந்து பஹ்ரைன் சுதந்திரம் பெற்றது,
1960 ஆகஸ்ட் 15 அன்று பிரான்ஸ் காங்கோவை சுதந்திரமாக அறிவித்தது.
- ஆகஸ்ட் 15, 1519 இல் பனாமா நகரம் உருவாக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 15, 1854 அன்று, கிழக்கிந்திய கம்பெனி ரயில்வே கல்கத்தாவிலிருந்து, அதாவது இன்றைய கொல்கத்தாவிலிருந்து ஹூக்லிக்கு ரயிலை ஓட்டியது.
இது அதிகாரப்பூர்வமாக 1855 இல் நடைபெற்றது.
இந்திய சுதந்திர இயக்கத்திற்கு மகாத்மா காந்தி தலைமை தாங்கினார்.
சுதந்திர கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை.
- அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வங்காளத்தின் நோகாலியில் பாபு இருந்தார்.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இனக் கலவரத்தைத் தடுக்க அவர் உண்ணாவிரதம் இருந்தார்.
ஒவ்வொரு சுதந்திர தினத்திலும், இந்தியப் பிரதமர் செங்கோட்டையிலிருந்து கொடியை பறக்கவிடுகிறார்.
ஆனால் ஆகஸ்ட் 15, 1947 அன்று
அது நடக்கவில்லை.
மக்களவை அமைச்சக ஆய்வறிக்கையின்படி, ஆகஸ்ட் 16 ம் தேதி,
பண்டிட் நேரு
செங்கோட்டையில் இருந்து
கொடியை ஏற்றினார்.
- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை ஆகஸ்ட் 15 வரை முடிவு செய்யப்படவில்லை.
சுதந்திரச் சுடர்கள் | அறிவியல்:
வளர்ச்சியை வழிநடத்திய அறிவியல் கொள்கைகள்
சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிப் போக்கை, நான்கு முதன்மையான அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைகள் வழிநடத்தின.
அவை,
அறிவியல் கொள்கை தீர்மானம் [Scientific Policy Resolution (SPR) – 1958],
தொழில்நுட்பக் கொள்கை அறிக்கை [Technology Policy Statement (TPS) - 1983],
அறிவியல் - தொழில்நுட்பக் கொள்கை [Science and Technology Policy (STP) –2003],
அறிவியல், தொழில்நுட்பம் - புத்தாக்கக் கொள்கை [Science, Technology and Innovation Policy (STIP) – 2013]
ஆகியவை.
1958 இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம் வரைவு செய்த முதல் அறிவியல் கொள்கை, இந்தியாவில் அறிவியல் மனோபாவத்துக்கு (scientific temper) அடிக்கல் நாட்டியது.
அறிவியல் தொழில்நுட்பத்துக்கான முதலீடுகளே மக்கள் நல அரசை உருவாக்கும் என்ற அறிதலில் இருந்து இந்தக் கொள்கை பிறந்தது.
ஆக, அறிவியல் தொழில்நுட்பம் சமூக-பொருளாதார மாற்றத்துக்கான கருவியாக மாறியது.
முதல் அறிவியல் கொள்கையின் விளைவாக, அடுத்த 30 ஆண்டுகளில் வலுவான அறிவியல் அடித்தளம் இந்தியாவில் அமைந்தது.
1980-களில்புதிய துறைகளாக அறிமுகமான தரவு, மின்னணுவியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்தக் கோரியது, இரண்டாவது அறிவியல் கொள்கை.
சமச்சீரான, நீடித்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவானது மூன்றாவது கொள்கை.
சமூக-பொருளாதார முன்னுரிமைகளில் அறிவியல், தொழில்நுட்ப இணைவு புத்தாக்கச் சூழலை உருவாக்கும் அம்சங்களைக் கொண்டிருந்த நான்காவது கொள்கை,
LIGO, LHC – CERN, ITER, SKA போன்ற
உலகளாவிய பெரும் அறிவியல் முன்னெடுப்புகளில் இந்தியாவின் பங்கெடுப்பை அதிகரித்தது.
தேசிய அறிவியல், தொழில்நுட்பம் - புத்தாக்கக் கொள்கை என்று பெயரிடப்பட்டிருக்கும் ஐந்தாவது அறிவியல் தொழில்நுட்பக் கொள்கையின் வரைவு- அபி தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.
-----------------------------------------------.