வாக்காளர் பட்டியல்
பெயர் சேர்த்தல் தொடர்பான
சிறப்பு முகாம்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
27.12. 2025,
28.12. 2025,
03.01.2026 மற்றும் 04.01.2026
ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல்
பெயர் சேர்த்தல் தொடர்பான
சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஓசூர். டிச. 23. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
27.12. 2025,
28.12. 2025,
03.01.2026 மற்றும்
04.01. 2026
ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல்
பெயர் சேர்த்தல் தொடர்பான
சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், 2026 நடைபெற்று வருகிறது.
அதன்படி 19.12.2025 அன்று
வரைவு வாக்காளர் பட்டியல்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சி பிரமுகர்கள்
முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும்
7,54,156 ஆண்கள்,
7.51, 658 பெண்கள்.
263 மூன்றாம் பாலினத்தவர்
என மொத்தம் 15,06,077 வாக்காளர்கள்
இடம் பெற்றுள்ளனர்.
01.01.2026யை தகுதி நாளாக கொண்டு
18 வயது நிரம்பியவர்கள் படிவம் 6 உடன்
உறுதிமொழி படிவத்தை சமர்ப்பித்து
தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில்
சேர்த்துக் கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில்
இடம்பெறாத
தகுதியுடைய வாக்காளர்கள்
எவரேனும் இருப்பின் அவர்களும்
18.01.2026 வரையிலான ஆட்சேபனை
மற்றும்
உரிமை கோரல் காலத்தில்
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து
தங்களது பெயரினை வாக்காளர்
பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி
புதிதாக பெயர் சேர்த்தல்
படிவம் - 8.
பெயரை நீக்குதல் படிவம்- 7.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல் போன்றவற்றிக்கு படிவம் - 8.
ஆகியவற்றை கீழ்க்கண்ட தேதிகளில்
அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில்
நடைபெறவிருக்கும் சிறப்பு முகாம்களில்
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து
வாக்காளராக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
27.12.2025. - சனிக்கிழமை -
28.12.2025. - ஞாயிற்றுக்கிழமை.
03.01.2026. - சனிக்கிழைமை.
04.01.2026. - ஞாயிற்றுக்கிழமை.
மேலும் வாக்காளர்கள்
தாங்கள் வீட்டிலிருந்தே
விண்ணப்பிக்க ஏதுவாக
https;//voters.eci.gov.in
என்ற இணையதள முகவரி வாயிலாகவும்,
கைபேசிகளில்
Voters Helpline App
செயலியினை பதிவிறக்கம் செய்தும்
விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து வாக்காளர்களும்
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை
சேர்த்து ஜனநாயக கடமையை
ஆற்றிட வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------.