இருபதாம் நூற்றாண்டின்
சிறந்த இந்தியக் கணிதவியலாளர்
சாதனையாளர்
சுப்பையா சிவசங்கரநாராயணன்
ஏப்ரல் – 5 – 1901
கணிதமேதை
சுப்பையா சிவசங்கரநாராயணன்
124-வது பிறந்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப்ரல். 5. -
சுப்பையா சிவசங்கர
நாராயண பிள்ளை
அல்லது எஸ். எஸ். பிள்ளை (ஏப்ரல் 5, 1901 - ஆகஸ்ட் 31, 1950) என்பவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளரில் ஒருவர்.
எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று.
பிறப்பும் கல்வியும்
திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றாலத்திற்கருகிலுள்ள வல்லம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
அவருக்கு ஒரு வயது ஆகுமுன்பே தாயார் கோமதி அம்மாள் காலமாகிவிட்டார். தந்தை சுப்பையா பிள்ளை தான் வயதான உறவினப் பெண்மணி ஒருவரின் உதவியுடன் குழந்தையை வளர்த்தார்.
செங்கோட்டை நடுத்தரப்பள்ளியில் பையன் படிக்கும்போதே சாஸ்திரியார் என்ற ஒர் ஆசிரியர் இவருடைய புத்தி வல்லமையையும் உழைப்பையும் பார்த்துப் பூரித்துப் போனார்.
இவருடைய பள்ளிப்படிப்பு முடிவதற்குள்ளேயே
சுப்பையாபிள்ளை காலமானபோது, அவர்தான் சிவசங்கரநாராயணனின் கல்லூரிப் படிப்பிற்கு உதவிசெய்தார்.
இடைநிலைக் கல்வி பயின்றது நாகர்கோயிலில் உள்ள
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில்.
திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில்
கல்விச் சலுகை பெற்று நன்றாகவே படித்து
B.A. பட்டம் பெற்றார்.
கணிதக்கல்வி மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்றார்.
சென்னை மாகாணக் கல்லூரியில்
1927 இல் ஆனந்தராவின்கீழ்
ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து
முதல்தர ஆராய்ச்சி மாணவன்
என்று பெயர் எடுத்தார்.
ஆனந்தராவுடன் கூட பேராசிரியர் வைத்தியநாதசுவாமியும் இவருக்கு வழிகாட்டினார்.
சென்னைப் பல்கலைக்கழகம் இவருடைய ஆராய்ச்சிகளைப் பாராட்டி இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) பட்டமே வழங்கியது.
சென்னைப்
பல்கலைக்கழகத்தின்
முதல் அறிவியலில் மதிப்புறு
முனைவர் பட்டம் (D.Sc.) பெற்றவர் இவர்தான்.
தொழில்
• 1929 - 1941 அண்ணாமலைப் பல்கலைக்கழகம். இங்கேயே
அவருடைய முழுத்திறமையும் வெளிப்படத் தொடங்கியது.
• 1941 . திருவனந்தபுரம் பல்கலைக் கழகம்
• 1942 கல்கத்தா பல்கலைக் கழகம்.
• 1943 - 1950 சென்னை பல்கலைக்கழகம்.
• 1950. Institute of Advanced Studies,
Princeton அவரை ஓராண்டிற்காக அழைத்தது.
• 1950 ஆகஸ்ட்-செப்டம்பரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்க இருந்த பன்னாட்டு கணித காங்கிரஸினாலும் பேச அழைக்கப்பட்டு,
பிரின்ஸ்டன் அழைப்பிற்காகவும் ஆகஸ்ட் 31, TWA விமானத்தில் பயணமானார்.
ஆனால் கெய்ரோவுக்கருகில்
விமானம் விபத்துக்குள்ளாகி,
உயிர் துறந்தார்.
சாதனைகள்
76 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அவை பெரும்பாலும் எண் கோட்பாட்டைப்பற்றியும் டயோபாண்டஸ் தோராயத்தைப் பற்றியும் இருந்தன.
----------------------------------------.