“சிப்காட் போகி”
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில்,
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, -
சிப்காட் போகி" எனப்படும்
மாபெரும் தூய்மைப் பணியை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள்,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
ஆகியோர் மற்றும்
ஒசூர் சிப்காட் தொழில் பூங்காவில்
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்
அவர்கள்
துவக்கி வைத்தார்கள்.
ஓசூர். ஜன. 9. –
தமிழ்நாடு
தொழில் முன்னேற்ற நிறுவனம்
சிப்காட் போகி
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட்
தொழிற் பூங்காவில்,
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற
நிறுவனம் சார்பாக,
சிப்காட் போகி எனப்படும்
மாபெரும் தூய்மைப் பணியை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள்,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
ஆகியோர் ஜனவரி 09-ம் தேதி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதேபோல
ஒசூர் சிப்காட் தொழில் பூங்காவில்,
மாபெரும் தூய்மைப் பணி முகாமினை
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு. ஒய்.பிரகாஷ்
அவர்கள் ஜனவரி 9-ம் தேதி
துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
சிப்காட் நிறுவனம் அதன் அனைத்து
தொழில் பூங்காக்களிலும்
தூய்மை,
அழகிய தோற்றம் மற்றும்
சுகாதாரமான சூழலை
பேணுவதில் சிப்காட் உறுதியாக
செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கான
செயல் திறனை மேம்படுத்துவதே
சிப்காட் நோக்கமாகும்.
போச்சம்பள்ளி சிப்காட் பூங்கா
1379.76 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ளது.
இதில் 152 நிறுவனங்களுக்கு
நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,
50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
இயங்கி வருகிறது.
இதன் மூலம் 10,000 க்கும் மேற்பட்ட
வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
சிப்காட் போகி
இதன் தொடர்ச்சியான முயற்சியின்
ஒரு பகுதியாக சிப்காட் போகி எனப்படும் விரிவான தூய்மை இயக்கத்தை
சிப்காட் நிறுவனம் அனைத்து தொழிற் பூங்காக்களிலும்
நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இயக்கம் இன்று (09.01.2026) தொடங்கி
14.01.2026 அன்று நிறைவடையும் வகையில் திட்டமிட்டுள்ளது.
இது மகிழ்ச்சிகரமான
சமூக பொங்கல் பண்டிகை
கொண்டாட்டங்களுடன்
ஒத்திசைலாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் சிப்காட் நிறுவனத்தின் துாய்மைப் பணியாளர்கள்
அனைத்து பொதுபயன்பாட்டு பகுதிகளான
சாலைகள்,
வடிகால் அமைப்புக்கள்,
காலி நிலங்கள் மற்றும்
பிற சமூக வசதிகளில்
தூய்மை பணிகளை
மேற்கொள்ள உள்ளனர்.
இந்த தூய்மை முயற்சியின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் விதமாகவும்
இதில் பங்கேற்கும் அனைவரிடையும்
ஒற்றுமை மற்றும் நட்புறவை
வலுப்படுத்தும் நோக்கிலும்
14.01.2026 சிப்காட் திட்ட அலுவலகத்தில்
சமூக பொங்கல் விழாக்கள்
நடத்த திட்டமிடப்பட்டு
இத்தூய்மை பணிகளுக்காக
50 தூய்மை பணியாளர்கள் மற்றும்
4 ஜேசிபி வாகனங்கள்
பயன்படுத்தப்பட உள்ளது.
மாபெரும் தூய்மைப் பணி
அதேப்போல்,
ஓசூர் சிப்காட் தொழில் பூங்காவில்,
மாபெரும் தூய்மைப் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் சிப்காட் நிறுவனத்தின்
சுமார் 30 க்கும் மேற்பட்ட
தூய்மை பணியாளர்கள்,
சிப்காட் பகுதி முழுவதும்
2,092 ஏக்கரில் உள்ள அனைத்து
பொது பயன்பாட்டு பகுதிகளான
சாலைகள்,
வடிகால் அமைப்புகள்,
காலி நிலங்கள் மற்றும்
பொதுப் பயன்பாடுகளான
சிப்காட் நீரேற்று நிலையம்,
சிப்காட் தீயணைப்பு நிலையம்
ஆகிய இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், இப்பணிக்கு 3 ஜேசிபி இயந்திரங்கள்,
புல் வெட்டும் இயந்திரங்கள்,
2 டிராக்டர்கள்
ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்சியில்
சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர்
திரு. K.A. சிபிசக்ரவர்த்தி,
சிப்காட் மேற்கு மண்டல
செயற்பொறியாளர்
திரு.N.பசுபதி.
பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர்
திருமதி.V.சிந்து.
ஓசூர் சிப்காட் திட்ட அலுவலர்
திரு.ராஜ்குமார்.
மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்
மாநகர் நல அலுவலர்
மரு.அஜிதா,
போச்சம்பள்ளி வட்டாட்சியர்
திரு.அருள்
மற்றும் சிப்காட் அலுவலர்கள்,
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
----------------------------------------.