ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
முன்னாள் அரிமா சங்க
தலைவர்களுக்கு பாராட்டு விழா
ஓசூர். டிச. 15. –
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
சிறப்பாக சேவையாற்றிய முன்னாள் அரிமா
சங்க தலைவர்களுக்கு பாராட்டு விழா ஓசூர் ஐஎம்ஏ அரங்கில் நடைபெற்றது.
அரிமா கே. மகேந்திரன்
இந்த விழாவில் ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர் கே.மகேந்திரன், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
அரிமா கே. தனபாலன்
முன்னாள் பன்னாட்டு இயக்குநர்
அரிமா கே. தனபாலன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்களின் சேவையை பாராட்டி
தலைப்பாகை, மாலை, பொன்னாடை
அணிவித்தும், அரிமா மகளிருக்கு கிரீடம் அணிவித்தும், நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
அரிமா டி. ரவிவர்மா
விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர்
அரிமா டி. ரவிவர்மா, மாவட்ட இரண்டாவது துணை ஆளுநர் பொன்னுசாமி மற்றும் லயன்ஸ்
சங்க நிர்வாகிகள் பங்கேற்று, முன்னாள் தலைவர்களின் சேவையை பாராட்டியும் வாழ்த்தியும் பேசினார்கள்.
அரிமா டி.வி. ரமேஷ்
2011-2012 இந்த ஆண்டில் ரிங்ரோட்டில் இரண்டு
நிழற்குடை அமைத்துக்கொடுத்த தலைவர் இவர். இளம் சிறார்களுக்கு வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்திய தலைவர், பணப்பெருக்கத்திற்காக ட்ராக்கர்ஸ் ப்ராஜெக்ட்,
சேலை ப்ராஜெக்ட், இரண்டு கண் சிகிச்சை முகாம், இரண்டு பிளட் கேம்ப் நடத்திய தலைவர்.
கூர்க் சுற்றுலா
குடும்பச் சுற்றுலாவாக கூர்க் அழைத்துச் சென்ற தலைவர். இந்த ஒப்பற்ற தலைவரான அரிமா டி.வி.ரமேஷ் மற்றும் அவரது துணைவியார் அரிமா மகளிர் அம்முரமேஷ் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து. அவரது துணைவியாருக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா வி. கோபிநாத்
2012 -2013 இந்த ஆண்டின் தலைவராக பொறுப்பேற்கும் பொழுதே பார்வை அற்றோரை வைத்து எம்.ஓ.சி செய்ய வைத்து இந்த மாவட்டத்தையே திரும்பி பார்க்க வைத்த உன்னத தலைவர்.
பார்வையற்ற மாணவர்கள் 10-வது மற்றும்
12-வது வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய உன்னத தலைவர்.
கண் அழுகிப்போன ஒரு நபருக்கு அந்த கண்ணை எடுத்து விட்டு அதற்கு பதில் புதிய கண்ணை பொருத்தியவர்.
வைர நட்சத்திர விருது
இவர் வைர நட்சத்திர விருது
பெற்றவர்.
30 நாட்களும் வெவ்வேறு அனாதை இல்லங்களுக்கு உணவளித்த உத்தமருக்கு நாவல் ப்ராஜெக்ட் விருது பெற்ற வெற்றியாளர். அரிமா வி. கோபிநாத் அவர்களின் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து. நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா பி. சீதாராமன்
2013-2014 ஆளுநரின் யோகா திட்டமான அந்த திட்டத்தை மிகப்பெரிய அளவில் யோகா பயிற்சி நடத்தி யோகத்தைப் பெற்றுக் கொண்ட தலைவர்.
முதன் முதலில் அனைத்து சங்க கூட்டங்களையும் உள்ளுரில் நடத்தாமல் வெளியூர்களுக்கு சென்று நடத்திய தலைவர்.
பத்து ஜோடி கண்களை தானமாக பெற்ற தன்னலமற்ற தலைவர்.
வைர நட்சத்திர விருது
பெற்ற டைமண்ட் தலைவர்.
ஃபேமிலி டூருக்காக குழு மணாலி கூட்டிச் சென்ற குழு தலைவர் அரிமா பி. சீதாராமன்
அவர்களின் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து. அவரது துணைவியார் அரிமா மகளிருக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா பி. கே. சபாபதி
2017 – 2018 ஆண்டின் ஆதரவற்ற குழந்தைகளை
சர்க்கஸ் அழைத்துச்சென்று அவர்கள் சந்தோஷப்படுவதை கண்டு மற்றவர் உள்ளத்திலும் இடம் பிடித்த தலைவர்.
தத்துப்பள்ளி வகுப்பறைக்கு தரைத்தளம் அமைத்தவர். முன்னாள் தலைவர்களுக்கு
மேகசின் தயார் செய்தவர்.
வைர நட்சத்திர விருது
பெற்ற விருதாளர் அரிமா பி.கே.சபாபதி
மற்றும் அவரது துணைவியார்
அரிமா மகளிர் சாந்தி சபாபதி அவர்களின்
சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து. அவரது துணைவியார் அரிமா மகளிருக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா ஏ. சிவா
2018-19 ஆண்டின் மெகா ஸ்டார் நைட்
ப்ரோக்ராமை நடத்தி வெற்றி கண்டு எட்டு லட்சம் ரூபாயில் தத்துப்பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்துக் கொடுத்த மிக மிக உன்னத தலைவர். ஃபண்ட் ரைசிங் ப்ராஜெக்ட் ஆக ஸ்வீட் ப்ராஜெக்ட் மற்றும் கிரேக்கர்ஸ் ப்ராஜெக்ட் இவற்றில் பணப்பெருக்கத்தைக் கண்டவர் மற்றும் நமது சங்க குழந்தைகளை ஜேசி நடத்தும் அறிவு மேம்பாட்டுத்திறனை ஏற்படுத்தி காட்டியவர் அரிமா ஏ. சிவா அவர்களின் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா சி. சாமிநாதன்
2019-2020 அந்த ஆண்டில் ஆன்லைன் மூலமாக பல வித்தைகளை காட்டிய தலைவர். தொழிற்சாலை முதலாளிகள் தங்களுடைய தொழிலை மேம்படுத்த பழைய யுக்திகளை மிக அருமையான விளக்க உரையாளரை வைத்து ஆன்லைனில் நடத்தியவர். மற்றும்
உளவியல் பயிற்சி மற்றும் கண் சிகிச்சை முகாம் மற்றும்
கண் தானம் மற்றும் ரத்த தானம் முகாம்களை நடத்திய தலைவர்.
இதை மிகைப்படுத்தும் அளவில் மகளிர் தினத்தன்று மகளிருக்கான குடும்ப உறவுகளைப் பற்றி மிகச் சிறந்த ட்ரெயினர்
ராதா கண்ணன் அவர்களை வைத்து நடத்திய
குடும்பத்தலைவர் அரிமா சி.சாமிநாதன் அவர்களின் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து. அவரது துணைவியார் அரிமா மகளிருக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா ஜி. சாம்சங் சுந்தரம்
2020-2021 ஆண்டில் மெகா பேமிலி டூர், 55 நபர்களை கொரோனா நேரத்தில் பல இடையூறுகளுக்கு இடையில் வெற்றிகரமாக அனைவரையும்
அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அழைத்துச் சென்று திருப்பி கூட்டி வந்த குணம் உள்ள தலைவர்.
கொரோனா காலத்தில் உதவுவதற்கு ஆம்புலன்ஸ் அமைத்துக் கொடுத்த அன்பாளர்.
மழைநீர் சேகரிப்பு என்ற ஆளுநரின் திட்டமான அந்தத் திட்டத்தை திறம்பட செய்த திறமையாளர். இவரது காலத்தில் மண்டல தலைவராக இருந்த அரிமா டி.வி.ரமேஷ்
அவர்கள் நடத்திய மண்டல சந்திப்பை மிகச்
சிறப்பாக நடத்துவதற்கு உதவிய உன்னத தலைவர் அரிமா ஜி.சாம்சங் சுந்தரம் அவரது துணைவியார் அரிமா மகளிர் ராணி சாம்சங் சுந்தரம் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து. அவரது துணைவியார் அரிமா மகளிருக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா ஏ. அண்ணாமலை
2022-2023 ஆம் ஆண்டின் டிராபிக் போலீஸ்
நிலையத்திற்கு சிசிடிவி கேமரா அமைத்து கொடுத்த அமைப்பாளர். அதியமான் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து
காட்டிய செயல் வீரர். தேவிப்பரியா என்ற ட்ரெயினரை ஏற்பாடு செய்து மாணவ, மாணவிகளுக்கு கைப்பேசியில் ஏற்படும் பல சிக்கல்களை எடுத்துக் கூறும் விதமாக நடத்திக்
காட்டியவர் அரிமா ஏ. அண்ணாமலை அவர்களின் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரிமா டி.ஆர். சங்கர்
2023-2024 இந்த ஆண்டில் மாற்று திறனாளிகளுக்கு பகல் நேர பராமரிப்பு பள்ளியில்
டிஜிட்டல் நூலகம்
ஏற்படுத்திக்
கொடுத்த வள்ளல். மற்றும் மாற்று திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் செய்து வைத்த செயல் தலைவர்.
நாலு ஜோடி கண் தானங்களை பெற்றவர்.
பிளட் கேம்ப் இரண்டு நடத்தி உள்ளார். தத்துப்பள்ளிக்கு, எல்கேஜி மற்றும் யுகேஜி
குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் உள்ளது போல தரம் வாய்ந்த வகுப்பறையை ஏற்படுத்திக் கொடுத்த அன்புத் தலைவர்
அரிமா டி.ஆர். சங்கர் அவர்களின் சேவையை பாராட்டி தலைப்பாகை, மாலை, பொன்னாடை அணிவித்து. அவரது துணைவியார் அரிமா மகளிருக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த விழா ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
அரிமா என்.கண்ணன்.
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா ஆர். ரவிசங்கர்
செயலாளர்(செயல்திட்டம்)
அரிமா பி. மாதேஸ்குமார்
பொருளாளர்
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.