கிருஷ்ணகிரி மாவட்டம்
மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று
அஞ்செட்டியை புதிய ஒன்றியமாக
அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி
- முன்னாள் எம்எல்ஏ. கே.ஏ.மனோகரன்
ஒசூர். செப்.16. -
அஞ்செட்டி ஒன்றியம்
மலை வாழ் மக்கள் அதிகம் வசிக்கும்
தளி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து
புதிய ஊராட்சி ஒன்றியமாக அஞ்செட்டியை அறிவித்த
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு
இந்திய தேசிய தொழிற்சங்கத்தின்
(ஐஎன்டியூசி) சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என
முன்னாள் எம்எல்ஏ மனோகரன்
கூறினார்.
ஒசூர் காமராஜ் காலனியில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் கூறியதாவது.
நானும்,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை 4.1.2023 ல் சந்தித்து அஞ்செட்டியை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும்.
அங்கு நிறைய பழங்குடி மக்களுக்கு வசித்து வருகின்றனர்.
இதனால் அந்த மலை வாழ் மக்களுக்கு
நல்ல வசதி மற்றும் உதவிகள் கிடைக்கும்
என கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தோம்.
அதேபோல்
தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், சட்ட மன்றத்தில் அஞ்செட்டியை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செப்.14 ல் வந்த
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தளி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து அஞ்செட்டியை புதிய ஊராட்சி ஒன்றியமாக அறிவித்துள்ளார்.
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதல் கோரிக்கை
1992- 93 ல் சட்டமன்றத்தில் இந்த தளி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினராக இருந்த நானும் வெங்கட்ராம ரெட்டியும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தோம்.
மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று
முதல்வர் செப்.14 ல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதனால் அந்த பகுதி வாழ் மக்களுக்கு நல்ல முறையில் நல்ல விதமான அரசு உதவிகள் கிடைக்கும்.
தளி சாலை ரயில்வே மேம்பாலம்
ஒசூர் தளி சாலையில் மிகவும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய
தளி ரயில்வே மேம்பாலத்தை கேட் நம்பர் 104 அதற்கான தமிழக அரசு பங்கு நிதி ரூ.90 கோடி வழங்கியுள்ள நிதியுடன் மத்திய அரசு ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து
மத்திய ரயில்வேத்துறை அமைச்சரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுதில்லிக்குச் சென்று நானும்,
காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலாளருமான சத்தியமூர்த்தியும், கோரிக்கை மனு அளித்தோம்.
தளி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதியை ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
மேலும் கெலமங்கலத்தில் சுற்றுப்புற ஒரு வெளிவட்டச் சாலை,
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை,
தருமபுரி நெடுஞ்சாலை,
எஸ்.டி.ஆர்.ஆர் ஆகிய 3 சாலைகளை
இணைக்கும் வகையில் உள்வட்டச் சாலை மற்றும்
ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மேம்பாலம் ஆகியவற்றை அறிவித்த முதல்வருக்கு நன்றி.
திறமை வாய்ந்த ஒசூர் மாநகராட்சி ஆணையரை நியமிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஒசூரை மாநகராட்சியாக 2017 ல் அறிவித்தார்.
ஆனால் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஏதும் செய்யவில்லை.
அனைத்து சாலைகளும், தார்ச்சாலைகளாக போட வேண்டும்.
ஒசூருக்கு புதிய மாநகராட்சி காவல் ஆணையரை நியமிக்க வேண்டும்.
அப்பொழுதுதான சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும்.
ஒசூரில் அமையும் புதிய தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின் போது ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளர் முனிராஜ்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி
ஆகியோர் உடனிருந்தனர்.
----------------------------------------------.