ஓசூர் பிரைடு அரிமா சங்கம்
பெஸ்டோ இந்தியா இணைந்து
ரத்த தான முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
ஓசூர் பிரைடு அரிமா சங்கம் மற்றும்
பெஸ்டோ இந்தியா நிறுவனம் சார்பில்
ரத்த தான முகாம்
ஓசூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு
77 யூனிட் ரத்தம் நன்கொடை.
ஓசூர். டிச. 13. –
ஒசூர் பிரைடு அரிமா சங்கம் மற்றும்
ஓசூர் பைரமங்கலத்தில் அமைந்துள்ள
பன்னாட்டு நிறுவனமான
பெஸ்டோ இந்தியா தனியார் நிறுவனம்
இணைந்து நடத்திய ரத்த தான முகாமில்
77 யூனிட் ரத்தம் நன்கொடையாக பெறப்பட்டு
ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் பைரமங்கலத்தில் இயங்கி வரும்
பன்னாட்டு நிறுவனமான
பெஸ்டோ இந்தியா தனியார் நிறுவனம்
மற்றும்
ஒசூர் பிரைடு அரிமாச் சங்கம் சார்பில்
பெஸ்டோ இந்தியா நிறுவனத்தில்
டிசம்பர் 12-ம் தேதியன்று ரத்த தான முகாம்
நடைபெற்றது.
அரிமா சங்க மண்டலதலைவர்
அரிமா கருணாகரன்,
வட்டாரத் தலைவர்
அரிமா சிவகுமார்
அவர்கள் சிறப்புரையுடன் முகாம் துவங்கப்பட்டது.
பெஸ்டோ இந்தியா நிறுவன
தலைமை அதிகாரி
திரு. மோகன் குமார்
ரத்த தானம் செய்தவர்களை பாராட்டி பேசினார்.
இந்த ரத்த தானம் முகாமில்
ஓசூர் அரசு மருத்துவமனை
மருத்துவர் அமுதா.
அவர்கள்
தலைமையிலான குழுவினர் பங்கேற்று,
ரத்த தானம் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
ரத்த தானம் வழங்கும்
கொடையாளர்களின் உடலின்
ரத்த அழுத்தம்,
சர்க்கரை அளவு
பரிசோதிக்கப்பட்டு,
ரத்த தானம் பெறப்பட்டது.
இந்த முகாமில்
பெஸ்டோ இந்தியா நிறுவன
தொழிலாளர்கள் மற்றும்
பிரைடு அரிமா சங்க நிர்வாகிகள்
ஆர்வத்துடன் பங்கேற்று
ரத்த தானம் செய்தனர்.
சான்றிதழ்கள்
ரத்த தானம் வழங்கிய
கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஆப்பிள், வாழைப்பழம், பிஸ்கெட், பழரசம்
ஆகியவை வழங்கப்பட்டது.
ஒசூர் அரசு மருத்துவமனை
ரத்த வங்கி
முகாம் முடிவில் மொத்தம் 77 யூனிட் ரத்தம் நன்கொடையாக பெறப்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அளிக்கப்பட்டது.
சிறப்பான ஏற்பாடுகள்
பெஸ்டோ இந்தியா நிறுவன மேலாளர்
திரு. கோகுலநாதன்
தலைமையில் மனிதவள அதிகாரிகள்
ரம்யாஸ்ரீ,
உமாமகேஸ்வரி.
ரீனா
ஆகியோர் ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த ரத்த தான முகாமில்
ஒசூர் பிரைடு அரிமாச் சங்க தலைவர்
அரிமா. காளியப்பன்,
பொருளாளர்
அரிமா. ரமேஷ்
ஆகியோருடன் அரிமா சங்க
மூத்த உறுப்பினர்கள்
அரிமா. சதாசிவய்யா,
அரிமா. சக்கரவர்த்தி,
அரிமா. செழியன்,
அரிமா. தாமஸ்,
அரிமா. ஜெயந்தி,
அரிமா. மாதேஷ்,
அரிமா. அஞ்சலி,
அரிமா. நிஷா,
அரிமா. நந்தினி செழியன்.
அரிமா. திவ்யா
ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓசூர் பிரைடு அரிமா சங்க ரத்ததான
திட்டத் தலைவர்
அரிமா. ராதாகிருஷ்ணன்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை
ஒருங்கிணைத்திருந்தார்.