ஓசூர் மாநகராட்சி
கல்விக் குழு கூட்டம்
ஓசூர். டிச. 20. –
ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில் கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது.
கல்விக் குழு தலைவர்
எச். ஸ்ரீதர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அரங்கில் கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது. கல்விக் குழு தலைவர் எச். ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த், செயற்பொறியாளர்(பொறுப்பு) நாராயணன், மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் அஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர்கள்
இந்த கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது, தங்களுடைய பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கோரிக்கை விடுத்தனர்.
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
அவர்களை தொடர்ந்து கல்விக்குழு தலைவர் ஸ்ரீதர் பேசியதாவது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையின்படி மாநகராட்சி கல்விக் குழு சார்பில் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கல்விக் குழு கவுன்சிலர்கள், மாநகர ஊழியர்கள் கலந்துகொண்டனர்.