கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
22-வது வார்டில்
மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர்
நிகழ்ச்சி
எம்எல்ஏ பங்கேற்பு
ஓசூர். அக். 26. –
மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் நடந்த மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியில்
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
பங்கேற்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் உள்ள முனீஸ்வர்நகர் தனியார் மண்டபத்தில் அக்டோபர் 25-ம் தேதியன்று மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு
மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவரும்,
22-வது வார்டு உறுப்பினருமான
என்.எஸ். மாதேஸ்வரன்
தலைமை வகித்தார்.
ஓசூர் மாநகராட்சி
மேயர் எஸ்.ஏ. சத்யா
முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக
ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
பங்கேற்று சிறப்புரையாற்றி பேசியதாவது,
இந்தியாவிலேயே எந்த முதல்வரும் செய்யாத திட்டங்களை
முதலமைச்சர் ஸ்டாலின்
செய்து வருகிறார்.
சட்டப்பேரவையில் நான் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஓசூர் மாநகராட்சியில் ரூ.2,500 கோடிக்கு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு 1கோடியே 65லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதில் தகுதியுள்ள 1கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்திட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 50லட்சம் பேருக்கு விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
அதற்கு நாம் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில்
துணை மேயர்
ஆனந்தய்யா,
மாநகர பகுதி செயலாளர்
வெங்கடேஷ்,
மாநகர மண்டல தலைவர்
காந்திமதி கண்ணன்,
மாநகர வரிவிதிப்பு குழு தலைவர்
சென்னீரப்பா,
முனீஸ்வர்நகர் குடியிருப்போர்
சங்க தலைவர்
பிரகாஷ்,
மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
------------------------------.