முதலமைச்சரின்
பொது நிவாரண நிதி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சி தேர்ப்பேட்டையைச் சேர்ந்த
கால்பந்து விளையாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு
மாண்புமிகு
உணவு மற்றும் உணவுப்பொருள்
வழங்கல் துறை அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள்,
முதலமைச்சரின் பொது நிவாரண
நிதியிலிருந்து
ரூ.3லட்சத்திற்கான
காசோலையை வழங்கினார்.
ஒசூர். – பிப். 5. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூரில் 03.02.2026 அன்று,
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் முன்னிலையில்,
கல்லூரியில் கால்பந்து விளையாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
ரூ.3லட்சத்திற்கான
காசோலையை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டம்,
தேர்ப்பேட்டை என்ற முகவரியை சேர்ந்த செல்வி.திவ்யதர்ஷினி (வயது 17)
த/பெ.வடிவேல் என்பவர்,
சேலம் மாவட்டம்,
வடசென்னிமலை சமூக நீதி
(கல்லூரி மாணவியர்) விடுதியில் தங்கி
தலைவாசல் வட்டம்,
சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில்
கணினி அறிவியல் முதலாம் ஆண்டு
கல்வி பயின்று வந்த நிலையில்
23.01.2026 மதியம் 1.00 மணியளவில்
சக மாணவிகளுடன் கல்லூரியில் கால்பந்து
விளையாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தமைக்கு
அவரது தாயார்
திருமதி.வள்ளி
க/பெ.வடிவேல் (லேட்) என்பவருக்கு
முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து
ரூ.3 லட்சத்திற்கான காசோலையை
03.02.2026 அன்று
ஓசூரில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள் வழங்கினார்.
-----------------------------------.