ஓசூரில் தமிழ் வளர்ச்சி மன்றம்
உருவாக்கி தமிழ் வளர்த்தவர்
தகடூர் நெல்லிக்கனி என்று அழைக்கப்படும் பெருமை மிகு
கே.ஏ.எம். அவர்கள்.
திருக்குறள் போல் வாழ்க
- பாவலர் கருமலைத் தமிழாழன் புகழாரம்
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
கே.ஏ.மனோகரன்
74-வது பிறந்த நாள் விழா
கேக் வெட்டி கொண்டாட்டம்
அரசியல் கட்சியினர் நேரில் வாழ்த்து
ஓசூர். பிப். 22. –
முன்னாள் எம்.எல்.ஏ.வும்,
ஐ.என்.டி.யு.சி.
தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன்
ஓசூரில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் 74-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூரில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன் அவர்களின் 74-வது பிறந்த நாள் விழா பிப்ரவரி 21-ம் தேதி, அவரது ஆதரவாளர்கள் சார்பில் கே.ஏ.பி. திருமண மண்டபத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிறந்த நாளை முன்னிட்டு கே.ஏ.மனோகரன் முதலில் தனது பெற்றோர் சமாதிக்கு சென்று வணங்கி ஆசிபெற்றார்.
அதைத்தொடர்ந்து காமராஜ் காலனியில் உள்ள மண்டபத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி எம்.பி. வாழ்த்து
கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் கோபிநாத், கே.ஏ.எம். அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதரவாளர்கள் சார்பில் ஓசூர் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற
மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில்,
கோட்டை மாரியம்மன் கோயில்,
வரசித்தி விநாயகர் கோயில்,
பண்டாஞ்சநேயர் கோயில்
உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பல்வேறு இடங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.
கே.ஏ.எம். பிறந்தநாளை முன்னிட்டு
பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறந்த நாள் நிகழ்ச்சியில்
கோபிநாத்.எம்.பி,
ஐ.என்.டி.யூ.சி. அமைப்பு செயலாளர்
முனிராஜ்,
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
முரளிதரன்,
பாவலர் கருமலைத்தமிழாழன்
தொழில் அதிபர் சின்ராஜ்,
வீரமுனிராஜ், அமானுல்லா,
பழக்கடை ராமண்ணா,
வெங்கடப்பா, பெருமாள்,
விஜயகுமார், முனியப்பா,
சீனிவாச ரெட்டி, மோகன்ராஜ்,
அபுபக்கர், அசோக்குமார்,
கணேஷ். நரசிம்மன்,
காண்டிராக்டர் செல்வம்,
டி.ஜெ.சுகுமார்
மற்றும் ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள்,
மிண்டா நிறுவன அதிகாரிகள்,
ஊழியர்கள்,
தொழில் அதிபர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் அனைத்துக் கட்சி
அரசியல் பிரமுகர்கள் நேரிலும் செல்போன் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பாவலர் கருமலைத்தமிழாழன்
வாழ்த்து மடல்
ஓசூர் நகரில் தமிழ் பேசாத நிலையில்,
தமிழ் வளர்ச்சி மன்றம் உருவாக்கி இங்கு தமிழை வளர்த்தவர் தகடூர் நெல்லிக்கனி என்று அழைக்கப்பட கூடிய
பெருமை மிகு கே.ஏ.எம். அவர்கள்.
இங்குள்ள தமிழ் பள்ளிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடவும், அவர் வளர்த்த தமிழ் வளர்ச்சி மன்றம் காரணமாக இருந்தது.
அவர் திருக்குறள் போல் வாழ்க.
இவ்வாறு அவர் கூறினார்.
---------------------------------------------------------.