பசுமை தமிழ்நாடு இயக்க தினம்
பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு
1.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022 - 2025 - ஆம் ஆண்டு வரை
பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ்,
2,105.80 எக்டர் பரப்பளவில்
5,04,630 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டில் 300 எக்டர் பரப்பளவில் 1,50,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
ஓசூர். செப். 24. -
பசுமை தமிழ்நாடு தினம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
பில்லனகுப்பம் ஊராட்சி,
திப்பனப்பள்ளி கிராமத்தில்,
பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு,
மாவட்ட நிர்வாகம்,
வனத்துறை
ஊரக வளர்ச்சித்துறை
சார்பில் 1.50 லட்சம் மரக்கன்றுகள்
நடும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (24.09.2025) துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தெரிவித்ததாவது :
தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக,
"பசுமை தமிழ்நாடு இயக்கத்தை”
தொடங்கி உள்ளது.
மாநிலத்தில் புவியியல் பரப்பளவில் உள்ள வனம் மற்றும் மர மூடுபகுதியை தற்போது உள்ள 23.8% -லிருந்து
2030-31-ம் ஆண்டுக்குள் 33 சதவீதமாக அதிகரிப்பதே இந்த இயக்கத்தின் குறிக்கோள்.
இதன் ஒரு பகுதியாக
10 ஆண்டுகளில்
13,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்
265 கோடி பூர்வீக மரக்கன்றுகள் நடவு
செய்ய திட்டமிட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள், 24.09.2022 அன்று, வண்டலூர் விலங்கியல் பூங்காவில் பூர்வீக மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24-ம் தேதி "பசுமை தமிழ்நாடு இயக்க தினம்” ஆகக் கொண்டாடப்படுகிறது.
இதன் நோக்கம்
மர மூடுபரப்பை அதிகரித்தல்,
உயிர் சுற்றுச்சூழல் காத்தல்
மற்றும்
மக்களின் பசுமை செயல்பாடுகளில் பங்கெடுப்பை ஊக்குவித்தல் ஆகும்.
இவ்வியக்கம்
உயிரிச்சம்பத்தைக் காக்கவும்
வன உற்பத்தி திறனை மேம்படுத்தவும்,
மாங்குரோவ் பரப்பளவை விரிவுபடுத்தவும்,
மாநில நெடுஞ்சாலை
மற்றும்
தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவென்யூ மரக்கன்றுகள் நடவு செய்யவும்,
வேளாண்மை புலங்களில் மரங்களை ஊக்குவிக்கவும்
நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகள்,
கல்வி நிறுவனங்கள்,
கோயில் தோட்டங்கள்,
புனித கானல்கள்,
தொழிற்புறங்கள்,
குளங்களின் முற்றுப் பகுதிகள்,
படுகை நிலங்கள்
ஆகியவற்றை பசுமையாக்கவும்,
பசுமை வேலை வாய்ப்புகள் மூலம் உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்தவும்,
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் கவனம் செலுத்துகிறது.
இதுவரை பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்,
மாநிலம் முழுவதும் 10.86 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வியக்கத்தின்கீழ்,
வனத்துறையினால் 313 நாற்றங்கால்கள்
மற்றும் 5 உயர்நிலை நவீன நாற்றங்கால்கள்
நிறுவப்பட்டுள்ளன.
1,045 நர்சரிகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் MGNREGS இணைப்பின் மூலம் 1,045 நர்சரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற சுற்றுச்சூழல் காக்கவும், பசுமையான பொழுதுபோக்கு இடங்களாகவும், அமைய
88 “மரகத பூஞ்சோலைகள்”
நிறுவப்பட்டுள்ளன.
24 சதுர கி.மீ புதிய மாங்குரோவ் உருவாக்கப்பட்டு 12 சதுர கி.மீ சிதைந்த மாங்குரோவுகள் மீளமைக்கப்பட்டுள்ளன.
2025-26-ம் ஆண்டிற்காக 12.65 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டிற்கான இயக்கத்தின் கொடி இனம் ஆக "நாவல்” (Syzygium cumini) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 24-09-2025 அன்று நடைபெறும் அனைத்து மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சிகளுக்கும் நாவலை மையப்படுத்தி நடைபெறும்.
வனத்துறை 2025-26-ம் ஆண்டில் மொத்தம்
1.50 லட்சம் நாவல் மரக்கன்றுகளை நடப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி சமூகக்காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் மூலம் 2022-23 முதல் 2024-25 வரை
பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ்,
5,04,630 மரக்கன்றுகள் 2105.80 எக்டர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
2025-26-ம் ஆண்டில் 300 எக்டர் பரப்பளவில்
1,50,000 மரக்கன்றுகள் நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி,
செப். 24-ம் தேதியன்று பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்,
வனத்துறை
மற்றும்
ஊரக வளர்ச்சி மற்றும்
பஞ்சாயத்து ராஜ் துறை,
இணைந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை வேப்பனப்பள்ளி வட்டாரம், பில்லனகுப்பம் பஞ்சாயத்து, திப்பனப்பள்ளி கிராமத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான மூன்று ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில்
1,500 பலஇன மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற மரக்கன்றுகள் நடவு விழாவில்,
தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,
அரசு மாதிரி பள்ளி மற்றும்
அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ / மாணவியர்கள்,
ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள்,
MGNREGS பணியாளர்கள்,
வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனவர்கள்
என மொத்தம் 150 நபர்கள் கலந்துக்கொண்டு, மரக்கன்றுகள் நடவு பணிகளை மேற்கொண்டனர்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.
மேலும்,
மரக்கன்றுகள் நடவு பணிக்கு வருகைபுரிந்த தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு
சந்தனம்,
பெருநெல்லி
உள்ளிட்ட மரக்கன்றுகளுடன் மஞ்சப்பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட வன அலுவலர்
திரு.பகான் ஜெகதீஷ் சுதாகர் இ.வ.ப.,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
சமூக காடுகள் மற்றும் விரிவாக்க
கோட்ட வன அலுவலர்
திரு.தினேஷ் குமார்,
வட்டாட்சியர்
திரு.சின்னசாமி,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.முகம்மது சிராஜூதின்,
திரு.சதீஷ்பாபு,
உதவி திட்ட அலுவலர்
திரு.சென்னகிருஷ்ணன்,
வனச்சரக அலுவலர்கள்
திரு.மூர்த்தி,
திரு.சிவா,
திரு.செந்தில்குமார்,
திரு.குமார்,
வனவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-----------------------------------------.