தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்
மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)
பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது
பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின சார்ந்தவர்களுக்கு
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS)
தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஓசூர்.நவ. 19. –
சர்வதேச ஆங்கில மொழி
சோதனை முறை (IELTS)
தேர்விற்கான பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்
மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக
பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது
பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின சார்ந்தவர்களுக்கு
சர்வதேச ஆங்கில மொழி
சோதனை முறை (IELTS)
தேர்விற்கான பயிற்சி
அளிக்கப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்
மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)
நிறுவனமானது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின
இளைஞர்களுக்கு பல்வேறு திறன்
அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை
வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணாக்கர்கள்
ஆஸ்திரேலியா,
அமெரிக்கா,
கனடா,
இங்கிலாந்து,
அயர்லாந்து,
பிரான்ஸ்,
நியூசிலாந்து,
போன்ற முன்னணி வெளிநாட்டு
பல்கலைக் கழகங்களில் இளங்கலை அல்லது
முதுகலை பட்டப் படிப்பு பயில அடிப்படையான
International English Language Testing System (IELTS)
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை
தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை பெற
18வயது முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின சார்ந்த மாணாக்கர்கள்
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு
ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்றரை மாதமும்,
விடுதியில் தங்கி படிக்க வசதியும்,
பயிற்சிக்கான செலவின தொகையை
தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் சேர்வதற்கு
www.tahdco.com
என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு
செய்யலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------.