சென்னை ராஜ்பவன் சார்பில் நடந்த
குடியரசு தினவிழா கட்டுரைப்போட்டியில்
மாநில அளவில்
3-வது இடத்தில் வெற்றி பெற்ற
ஓசூரைச்சேர்ந்த
மாணவி S.மனு ஸ்ரீயா - விற்கு
குடியரசு தினவிழாவில்
ஆளுநர் ஆர்.என். ரவி
ரூ.25,000 பரிசு வழங்கி கவுரவிப்பு
மாவட்ட ஆட்சியர் பாராட்டு
ஓசூர். ஜனவரி. 31. –
சென்னை ராஜ்பவன்
2025-ம் ஆண்டு 76-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு
சென்னை ராஜ்பவன் சார்பில், நடந்த மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியில் 3-வது இடத்தில் வெற்றி பெற்று ஆளுநரிடம் பரிசு பெற்ற ஓசூர் மாணவி
எஸ்.மனுஸ்ரீயா-வை மாவட்ட ஆட்சியர் சரயு பாராட்டினார்.
76-வது குடியரசு தினவிழா
ஆளுநர் ஆர்.என். ரவி
இந்திய அரசியலமைப்பு தினத்தை யொட்டி சென்னை ராஜ்பவன் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் ஓசூர் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும்
மாணவி S. மனு ஸ்ரீயா,
“இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம்: முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களும்”,
என்ற தலைப்பில் கட்டுரை எழுதி,
மாநில அளவில் மூன்றாம் இடத்தில்
வெற்றி பெற்றார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாண்புமிகு ஆளுநர் திரு. R.N.ரவி, மாணவி எஸ்.மனு ஸ்ரீயா-வுக்கு பரிசாக 25,000 ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மாவட்ட ஆட்சியர் சரயு
இதனை தொடர்ந்து மாணவி எஸ்.மனுஸ்ரீயா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு அவர்களை, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஆட்சியர் சரயு, மாணவி எஸ். மனுஸ்ரீயா-வுக்கு பொன்னாடை அணிவித்து
பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது,
தனியார் பள்ளி
மாவட்ட கல்வி அலுவலர்
சி.கே. கோபாலப்பா,
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர்
ஆர்.துரை,
மாவட்ட துணைத்தலைவர்
சரவணா பவன்
ஓய்வூதியர் சங்க மாவட்ட
இணைச்செயலாளர்கள்
ஐ. கெம்பண்ணா,
எஸ்.ரங்கநாதன்,
ராஜா மணி
ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள்
மாரியப்பன்,
கோவிந்தசாமி,
தேவராஜன்,
ஓசூர் பப்ளிக் பள்ளி
முதல்வர் சிந்து அனுப்,
மாணவியின் பெற்றோர் சங்கர், அஞ்சனாதேவி,
மற்றும் பலர் உடனிருந்தனர்.
----------------------------.