கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
25-வது ஆண்டு வெள்ளி விழா
கொடியேற்றத்துடன் தொடக்கம்.
தருமபுரி மறைமாவட்ட ஆயர் பங்கேற்பு
ஓசூர்.ஆகஸ்ட் . 31. -
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
25- வது ஆண்டு வெள்ளி விழா
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரியில் அமைந்துள்ள புதிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 25- வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி மறைமாவட்டம் மத்திகிரி நேதாஜிநகரில் 2001-ம் ஆண்டில்
அருட்தந்தை தோமினிக்
அவர்களால் புதிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆலயம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதியன்று 25-வது ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கொடியேற்றம்
வெள்ளி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இந்த நிகழ்வில்
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள் தலைமை வகித்து கொடியேற்றி வைத்து ஆரோக்கிய அன்னை ஆலய வெள்ளிவிழாவை தொடங்கி வைத்தார்.
மாதா கொடி பவனி
முன்னதாக ஆயர் அவர்கள்,
செயின்ட் சேவியர் அகடமி பள்ளியின் புதிய பேருந்து மந்திரிப்பு செய்து,
பள்ளி முகப்பில் இருந்து ஆலயம் வரை மாதா கொடி பவனியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஆலயத்தில்,
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள் நவநாள் திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரை நிகழ்த்தி வழிநடத்தினார்.
இந்த கொடியேற்றம் மற்றும் நவநாள் திருப்பலி
ஆகிய நிகழ்வுகளில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி. பெரியநாயகம்,
பங்கு தந்தை கிறிஸ்டோபர்,
பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர்,
அருட்கன்னியர்கள்,
வின்சென்ட் தேபவுல்,
மற்றும் ஆயிரக்கணக்கான இறை மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெள்ளி விழாவை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வெள்ளி விழா
திருவழிபாட்டு நிகழ்வுகள்
01 - 09 - 2025 – திங்கள் - மாலை - 6 மணிக்கு –
திருப்பலி,
மறையுரை -
வழிநடத்துபவர்
அருட்பணி. ராபின்
எலத்தகிரி.
சிறப்பிப்பவர்கள்
குழந்தை இயேசு, தூய சூசையப்பர்,
பாத்திமா அன்னை
அன்பியங்கள்.
02 – 09 – 2025 – செவ்வாய் – மாலை 6 மணிக்கு
திருப்பலி,
மறையுரை
வழிநடத்துபவர்
அருட்பணி. சாவியோ
உதவி பங்கு தந்தை, ஓசூர்.
சிறப்பிப்பவர்கள்
புனித அந்தோணியார் அன்பியம்.
03 – 09 – 2025 – புதன் – மாலை 6 மணிக்கு
திருப்பலி, மறையுரை.
வழிநடத்துபவர்
அருட்பணி. M. ஜார்ஜ்
பங்கு தந்தை, ஓசூர்.
சிறப்பிப்பவர்கள்
புனித ஆரோக்கிய அன்னை அன்பியம்.
04 – 09 – 2025 – வியாழன் – மாலை – 6 மணிக்கு
திருப்பலி,
மறையுரை
வழிநடத்துபவர்
அருட்பணி.ஜோசப் ரொசாரியோ
BP அந்தோணி இல்லம்.
சிறப்பிப்பவர்கள்
பீட சிறுவர்கள்,
மறைகல்வி மாணவ, மாணவிகள்.
05 – 09 – 2025 – வெள்ளி - மாலை – 6 மணிக்கு
திருப்பலி,
மறையுரை
வழிநடத்துபவர்கள்
நம் பங்கின் முன்னாள் பங்கு தந்தையர்கள்,
அருட்பணி. ரொசாரியோ,
அருட்பணி. சக்கரையாஸ்,
அருட்பணி. தோமினிக்,
அருட்பணி. ஜான்கென்னடி,
அருட்பணி. பெரிய நாயகம் VF
சிறப்பிப்பவர்கள்
புனித சவேரியார் அன்பியம், ஆசிரியர்கள்.
06 – 09 – 2025 – சனி – மாலை - 6 மணிக்கு
திருபலி,
மறையுரை
வழிநடத்துபவர்
அருட்பணி, K. லூர்துசாமி
ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, ஆனந்தநகர்.
சிறப்பிப்பவர்கள்
பூண்டி மாதா அன்பியம்.
07 – 09 -2025 – ஞாயிறு -
காலை – 9.00 – 1.00 மணி வரை
திருப்பலி,
மறையுரை
செப வழிபாடு
வழிநடத்துபவர்கள்
அருட்பணி. ஜேம்ஸ்
கிருஷ்ணகிரி
அருட்பணி. சின்னப்பன்
தருமபுரி
சிறப்பிப்பவர்கள்
மரியாயின் சேனை தொடக்கநாள்
மரியாயின் சேனை.
08 - 09 - 2025 - திங்கள் - காலை 9 மணிக்கு
ஆடம்பர திருவிழா திருப்பலி
வழிநடத்துபவர்
அருட்பணி. M. மைக்கேல் மரியதாஸ் CMF
கிளாரட் பவன், கார்மேலரம், பெங்களுர் .
சிறப்பிப்பவர்கள்
புனித சலேத் மாதா அன்பியம்.
8-ம் தேதி மாலை 6 மணிக்கு
திருப்பலி,
தேர் மந்திரிப்பு
வழிநடத்துபவர்
அருட்பணி. பெரியநாயகம் VF
மத்திகிரி.
சிறப்பிப்பவர்கள்
பங்கு மக்கள்.
09 – 09 – 2025 – செவ்வாய் – காலை 6 மணிக்கு
திருப்பலி,
கொடியிறக்கம்
வழிநடத்துபவர்
பங்கு தந்தை.
நவநாட்களில் ஒவ்வொரு நாளும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்.
உங்கள் சிறப்பு கருத்துகளுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
பங்கின் வளர்ச்சிக்காக உங்கள் பேராதரவுத்தர வேண்டுகிறோம்.
– பங்கு தந்தை.
---------------------------------------------.