முதலமைச்சர்
சிறு விளையாட்டு அரங்கங்களின்
கட்டுமான பணிக்கு அடிக்கல்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
போச்சம்பள்ளி,
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சந்தனப்பள்ளி
ஆகிய இடங்களில்
ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள
முதலமைச்சர் சிறு விளையாட்டு
அரங்கங்களின் கட்டுமான பணிகளுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் இன்று (08.12.2025)
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து
காணொலிக்காட்சி வாயிலாக,
அடிக்கல் நாட்டினார்.
ஓசூர். டிச. 8. –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் இன்று (08.12.2025)
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக,
இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறையின்
தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் சார்பில்,
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
போச்சம்பள்ளி,
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சந்தனப்பள்ளி
ஆகிய இடங்களில்
ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள
முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பர்கூர் சட்டமன்ற தொகுதி
போச்சம்பள்ளி
அதனைத்தொடர்ந்து, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில்
ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள
முதலமைச்சர் சிறு விளையாட்டு
அரங்க கட்டுமான பணியினை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
ஆகியோர் இன்று (08.12.2025) துவக்கி வைத்தனர்.
தளி சட்டமன்ற தொகுதி
சந்தனப்பள்ளி
மேலும், தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்தனப்பள்ளியில்
ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள
முதலமைச்சர் சிறு விளையாட்டு
அரங்கங்களின் கட்டுமான பணிகளை
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.டி.ராமச்சந்திரன் (தளி)
திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்)
ஆகியோர் இன்று பூமி பூஜை செய்து
பணிகளை துவக்கி வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் ஆணைக்கிணங்க,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்
கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டு
துறையிலும் சிறந்து விளங்க,
மாவட்டம் மற்றும் மாநில அளவில்
செஸ் ஒலிம்பியாட் போட்டி,
மண்டல அளவில் ஜீடோ போட்டிகள்,
வாள் சண்டை,
பேட்மிட்டன்,
மாவட்டம் மற்றும் மாநில அளவில்
முதலமைச்சர் கோப்பை
உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு
போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று (08.12.2025)
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி,
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சந்தனப்பள்ளி
ஆகிய இடங்களில் தலா ரூ.3 கோடி வீதம்
மொத்தம் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமான பணிகளுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களில் நிர்வாக அலுவலகம்,
கால்பந்து,
கை பந்து,
கோ கோ,
உயரம் தாண்டுதல்,
நீளம் தாண்டுதல்,
கபடி, ஓட்டப்பந்தய மைதானம்
ஆகிய மைதானங்கள்,
பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரி,
முன் நுழைவு வாயில்,
சுற்றுச் சுவர்,
குடிநீர் சுத்திகரிப்பு மையம்,
மைதானத்தை சுற்றி
சோலார் மின் விளக்குகள்,
மின் வசதிகள்,
ஆழ்துளை கிணறுகள்
அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில்
தேன்கனிக்கோட்டை
பேரூராட்சி தலைவர்
திரு.டி.ஆர்.சீனிவாசன்,
தளி முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர்
திரு.சீனிவாசுலு
மற்றும் துறை சார் அலுவலர்கள்,
முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
---------------------------------------------.