கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் உபகோட்டத்தில்
விவசாயிகள் கேழ்வரகு
அறுவடை இயந்திரங்களை
இ-வாடகை மூலம்
நவம்பர் இறுதி
வாரத்திலிருந்து பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 20. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்
ராகி அறுவடை இயந்திரங்களை
இ-வாடகை மூலம்
நவம்பர் இறுதி வாரத்திலிருந்து பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் உபகோட்டத்தில்
தற்போது கேழ்வரகு அறுவடை பருவம் என்பதால்
கேழ்வரகு அறுவடை செய்ய
அறுவடை இயந்திரங்கள் தேவை என பல்வேறு
விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆகவே வேளாண்மை பொறியியல்துறை,
கிருஷ்ணகிரி மூலமாக திருவண்ணாமலை
மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து
வேளாண்மை பொறியியல் துறையின்
அறுவடை இயந்திரங்களை
(Combined harvester)
இ-வாடகை மூலம் நவம்பர் இறுதி வாரத்திலிருந்து
பெறலாம்.
மணிக்கு ரூ.1160 என்ற வகையில் விவசாயிகள்
இ-வாடகை மூலம் பணம் செலுத்தி இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் ஒசூர் உபகோட்டத்தின் சுற்று
வட்டாரங்களில் உடனடியாக இயந்திரங்களை
வாடகைக்கு பெற கீழ்கண்ட தனியார் இயந்திர
உரிமையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
1. ரமேஷ் தேன்கனிகோட்டை -
9585569275
2. ரமேஷ் ஈரோடு -
7639438723
3. DMR Harvester, -
6382087913
4. தேவராஜ், ஈரோடு-
9445207001
5. பாபு, திருவண்ணாமலை
7305701315
தனியார் இயந்திர உரிமையாளர், நிலத்தின்
தன்மையை பொறுத்து ரூ.2500 முதல் 3000/ வரை
வாடகை நிர்ணயித்துள்ளனர்.
மேலும் தொடர்புக்கு
உதவிசெயற்பொறியாளர் (வே.பொ)
திரு. N. ரவி.
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மை பொறியியல் துறை,
சென்னத்தூர் அஞ்சல் சாணசந்திரம்.
ராயகோட்டைரோடு,
ஒசூர்.
போன் - 9443083493
என்ற முகவரியில்
தொடர்புகொண்டு பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------.