கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் பேரூராட்சி
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில்
விளையாட்டு போட்டிகள் - 2025
Annual Sports Meet – 2025
பரிசளிப்பு விழா ---
தளி தொகுதிக்கு 4 கல்லூரிகளை பெற்று
தந்திருக்கிறேன் -
தளி எம்எல்ஏ
திரு. டி. ராமச்சந்திரன்
பெருமிதம்.
ஓசூர். நவ. 27. –
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகாடமி
கெலமங்கலம் பேரூராட்சியில் இயங்கி வரும்
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில்
விளையாட்டு போட்டிகள் - 2025
(Annual Sports Meet – 2025)
மற்றும் பரிசளிப்பு விழா
சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு
பள்ளி முதல்வர்
திரு. வினோத்குமார்.
தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு. டி.ராமச்சந்திரன்
அவர்கள் கலந்து கொண்டு
ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து விளையாட்டு
போட்டிகளை தொடங்கி வைத்து
சிறப்புரை ஆற்றினார்.
தளி எம்எல்ஏ
அவர்கள் பேசியதாவது...
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகாடமி
பள்ளியை பார்க்கும் போது
உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த பள்ளியின் திறப்பு விழாவில் நான் கலந்து கொண்டேன்.
அதன் பிறகு தற்போது பள்ளியின்
விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
இந்த பள்ளியில் படிக்கும்
கெலமங்கலத்தை சுற்றியுள்ள
கிராமங்களைச் சேர்ந்த
நமது குழந்தைகளின் திறமைகளை
பார்க்கும் போது, பெருமையாக இருக்கிறது.
நமது குழந்தைகள் இந்தளவுக்கு திறமையாக விளையாடுவார்களா, என்று வியக்கிறேன். குறிப்பாக நமது குழந்தைகள் பங்கேற்ற
நடனம்,
குங்ஃபூ போட்டிகள்,
சிலம்பம்
ஆகிய போட்டிகளை பார்க்கும் போது
மிகவும் பிரமிப்பாக உள்ளது.
ICSE - பாடதிட்டத்தில்...
எல்கேஜி வகுப்புக்கு பல லட்சங்களை
வசூலிக்கும் பள்ளிகளின் மத்தியில்,
கல்வியை சேவையாக கருதி
குறைந்த கட்டணத்தில்
தரமான கல்வியை
செவன்த் டே பள்ளி வழங்கி வருகிறது.
பள்ளி நிர்வாகத்தினரை மனதார பாராட்டுகிறேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது
தளி தொகுதியில் அரசு கல்லூரி
கொண்டு வர பாடுபடுவேன் என
உறுதியளித்திருந்தேன்.
அதன்படி தேன்கனிக்கோட்டையில்
அரசு கலைக்கல்லூரிகளை
கொண்டு வந்து மூன்றாண்டுகள்
நிறைவு பெற்றுள்ளது.
நான்கு கல்லூரிகள்
நான் சட்டமன்ற உறுப்பினராக
வெற்றி பெற்ற பிறகு தளி தொகுதியில்
பாலிடெக்னிக் உள்ளிட்ட 4 கல்லூரிகளை
கொண்டு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதக்கம்
சான்றிதழ்கள்
பாராட்டு
அதைத்தொடர்ந்து நடந்த விளையாட்டு போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
பதக்கம் மற்றும் சான்றிதழ்கள்
வழங்கும் நிகழ்ச்சியில்
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு. டி.ராமச்சந்திரன்
பங்கேற்று
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முறையே
தங்கப்பதக்கம்,
வெள்ளிப்பதக்கம்,
வெண்கலப்பதக்கம்,
ஆகிய மூன்று பதக்கங்கள் மற்றும்
சான்றிதழ்களை வழங்கி
பாராட்டினார்.
இந்த நிகழ்வில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
கெலமங்கலம் நகரச் செயலாளர்
திரு. மதுகுமார்
கவுன்சிலர் -
திரு. கிரிபாபு
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
-------------------------------.