கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டையில்
ரூ. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்படவுள்ள CM - சிறு விளையாட்டு
அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டு விழா.
முதலமைச்சர் காணொளி வாயிலாக
துவக்கி வைத்தார்.
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு. ஒய். பிரகாஷ்,
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு. டி. ராமச்சந்திரன்
ஆகியோர் பங்கேற்பு.
ஓசூர். டிச. 8. –
தளி சட்டமன்றத் தொகுதி
சி.எம். சிறு விளையாட்டு அரங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட
தேன்கனிக்கோட்டையில்
ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில்
தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு துறை மற்றும்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி
ரூ.50 லட்சம் மொத்தம்
ரூ. 3 கோடி ஒதுக்கீட்டில் புதிதாக
சிஎம் சிறு விளையாட்டு அரங்கம்
கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர்,
காணொளி காட்சி வாயிலாக துவக்கம்
முன்னதாக
டிசம்பர் 8-ம் தேதியன்று
தமிழ்நாடு முதலமைச்சர்,
23 சட்டமன்ற தொகுதிகளில்,
ரூ. 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
விளையாட்டு அரங்கங்களுக்கான
அடிக்கல் நாட்டு விழா
நிகழ்ச்சியில் பங்கேற்று
தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே
காணொளி காட்சி வாயிலாக
துவக்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை
அரசு கலைக்கல்லூரி அருகே நடைபெற்ற
அடிக்கல் நாட்டு விழாவில்
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு. டி. ராமச்சந்திரன்
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு. ஒய் பிரகாஷ்
ஆகியோர்
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று
கட்டிட பணிகளை
துவக்கி வைத்தனர்.
அதை தொடர்ந்து
ஓசூர் எம்எல்ஏ பேசியதாவது...
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான
அரசு கல்வி மற்றும் விளையாட்டிற்கு
எண்ணற்ற திட்டங்களை வழங்கி
அதன் மேம்பாட்டிற்காக
பல்வேறு நடவடிக்கைகளையும்
மேற்கொண்டு வரும்
ஒரு அரசாங்கமாக செயல்பட்டு
வருகிறது என தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து
தளி எம்எல்ஏ பேசியதாவது...
தேன்கனிக்கோட்டையில்
அரசு கலைக் கல்லூரி மற்றும்
தொழில் பயிற்சி மையம்
ஆகியவற்றை ஏற்கனவே
தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையின்
படி நிறைவேற்றி தந்த
அரசாங்கமாக தமிழ்நாடு முதலமைச்சர்
தலைமையிலான அரசு திகழ்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
இதே போல இந்தப் பகுதியில் விளையாட்டு
மேம்பாட்டிற்காக விளையாட்டு அரங்கம்
தேவை என சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும்
விதமாக இன்று இந்த திட்டத்திற்கான
பணிகளை துவக்கி வைத்ததற்கு
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
தெரிவிப்பதோடு இந்த அரசுக்கு
பொதுமக்கள் எப்பொழுதும்
ஆதரவாக இருக்க வேண்டும்
என கேட்டுக் கொள்வதாக அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்
தேன்கனிக்கோட்டை
பேரூராட்சி மன்ற தலைவரும்
திமுக நகர செயலாளருமான
திரு. டி. ஆர். சீனிவாசன்.
தளி ஒன்றிய முன்னாள் சேர்மன்
திரு. சீனிவாசலூ ரெட்டி.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்
திரு. ஜெயராம்.
திரு. ஜெகதீஷ்.
தளி திமுக ஒன்றிய செயலாளர்
திரு. திவாகர்.
சிபிஐ ஒன்றிய செயலாளர்
கிருஷ்ணப்பா.
முன்னாள் மாவட்ட ஊராட்சி
குழு உறுப்பினர்கள்.
பேரூராட்சி துணைத் தலைவர்
கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள்
கலந்து கொண்டானர்.
--------------------------------------.