நவராத்திரி விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் அம்மன் கோயில்களில்
உற்சவ மூர்த்தி வீதி உலா
கொலு வைத்து 10 நாள் சிறப்பு பூஜைகள்
நவராத்திரி விழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஓசூர். அக். 3. -
கல்யாண காமாட்சி அம்மன் கோயில்
ஓசூர் பாரதிதாசன் நகரிலுள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில்,
28ம் ஆண்டு நவராத்திரி விழா
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி
கல்யாண காமாட்சி அம்மன் கோயிலில்
20ம் ஆண்டாக கொலு
வைக்கப்பட்டிருந்தது.
இதை, பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பக்தர்கள் தினமும் பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கல்யாண காமாட்சி கோயிலில்
தினமும்
சிறப்பு ஹோமம்,
சுவாமிக்கு அபிஷேகம்
நடந்தது.
நாட்டிய நிகழ்ச்சிகள்
இந்த 10 நாட்களில் தினமும்
47 நாட்டிய நிகழ்ச்சிகள்
நடந்தன. இதில்
350 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று,
சிறப்பாக நாட்டியமாடி பக்தர்களின் பாராட்டுக்களைப் பெற்றனர்.
அனைத்து நாட்டிய கலைஞர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு அலங்காரம்
இந்த நவராத்திரி விழா நாட்களில்
வண்ண பட்டாடை மற்றும் வண்ணமலர்கள்அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண காமாட்சி அம்மன் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல
ஒசூர் சுயம்பு கோட்டை மாரியம்மன்
கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் தினமும் நடந்தது.
உற்சவ மூர்த்தி வீதி உலா
கடைசி நாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று
கோட்டை மாரியம்மன் உற்சவ மூர்த்தி
திருவீதி உலா நடந்தது.
ராமநாயக்கன் ஏரிக்கரை வழியாக,
ஏரித்தெரு,
எம்.ஜி. ரோடு,
நேதாஜி ரோடு
வழியாக சென்ற திருவீதி உலா, மீண்டும் கோயிலில் நிறைவு பெற்றது.
நவராத்திரி விழா நாட்களில்
சுயம்பு கோட்டை மாரியம்மன் வண்ண பட்டாடை மற்றும் வண்ணமலர்கள் அணிந்து
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நவராத்திரி நிகழ்ச்சிகளில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
----------------------------------.